என் மலர்
நீங்கள் தேடியது "புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்"
- 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு அபிஷேகம் நடக்கும்.
- அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மாரியம்மனை தரிசித்து செல்கின்றனர்.
இக்கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இங்கு மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பதால் அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் மட்டுமே நடைபெறும். உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.
இதனால் மூலவர் மாரியம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அப்போது அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெறும். அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து 5 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் தைலக்காப்பு அபிஷேகம் தொடங்கியது. இதனை முன்னிட்டு மூலவர் சன்னதி திரையிட்டு மறைக்கப்பட்டது.
இதையடுத்து அனுக்னஞ, விக்னேஸ்வர பூஜை, தேவதானுக்ஞை, யஜமான சங்கல்பம், புண்யாஹ வசனம், வேதிகார்ச்சனை, அக்னிகார்யம், ஜபஹோமம், பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றது. பின்னர், யாத்ரா தானம், க்ருஹப்ரீத்தி, கடம் புறப்பாடு நடந்தது. கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன.
அதனை தொடர்ந்து மூலஸ்தான மாரியம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது. வருகிற ஜூன் 1-ந்தேதி வரை தினமும் காலை, மாலை தைலக்காப்பும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூன் 4-ந்தேதி வரை (48 நாட்கள்) நடைபெறுகிறது.
- ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.
- ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, பள்ளிக்கூடம் உள்ளிட்ட ஏராளமான தமிழ், மலையாளம் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் நரேன். தற்போதும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் நரேன் இன்று தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.
மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார். அப்போது நீங்கள் நடிக்கும் படங்கள் நன்றாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டினர். அதற்கு மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகர் நரேன் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
- தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்.
1950-ம் ஆண்டு...இத்தலத்தில் கண்கொடுக்கும் காரிகையாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய், அம்மை நோயை போக்கி அருளும் அம்பாளாய், புண் போக்கும் பொற்புடை தெய்வமாய், தன்னை வணங்கும் அடியார்க்கு இணங்கி அருள்செய்யும் பேரன்னையாய் அருள்பாலிக்கிறாள் அம்பிகை மாரியம்மன்.

தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் இக்கோவிலில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
முன்னதாக இக்கோவிலுக்கு பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆசியோடு, ராஜாராம் ராஜா சஹேப் கடந்த 1950-ம் ஆண்டு, தன் முன்னோர்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, 1987-ம் ஆண்டு சுப்பிரமணியன் செட்டியார் உறுதுணையோடு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. பின்னர், கடந்த 27.6.2004-ம் ஆண்டில் தற்போதைய பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே பெருமுயற்சியால், கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா விமரிசையாக நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தற்போது சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 10-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

அதன்படி, கடந்த 3-ந்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும், 4-ந்தேதி நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், தொடர்ந்து, 5-ந்தேதி மகாலட்சுமி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், முறையே 6-ந்தேதி சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதியும் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், 7-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டு, மாலை திருக்குடங்கள் யாகசாலை எழுந்தருளுதல் செய்யப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
தொடர்ந்து சனிக்கிழமை காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர், மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடைபெற உள்ளது.
முறையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று, திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி முடிவடைந்து, தீபாராதனை நடைபெறும்.
- அம்மன் சுயம்பு வடிவாய் புற்று மண்ணால் ஆனவள்.
- அம்மனுக்கு தைல அபிசேகம் மட்டுமே. அபிசேகங்கள் கிடையாது.
கீர்த்தி சோழன் என்னும் அரசர் புன்னை நல்லூர் மாரியம்மன் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான்.
அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான வெங்கோஜி மகாராஜா 1680- ல் திருத்தல யாத்திரை செய்யும் போது கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து வழிபடுமாறு கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் கோவிலுக்கு வழங்கினார்.

1728-1735-ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோவிலாக கட்டினார். காலப்போக்கில் இது இவ்வளவு பெரிய கோவிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.
தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத் திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். தஞ்சைக்கு கிழக்காக அமையப்பெற்ற காவல் தெய்வமே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று சோழ சம்பு எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
17-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜாவால் இக்கோவில் உருவாக்கப்பட்டபோது, இப்பகுதி புன்னை வனக்காடாக இருந்துள்ளது.
மேலும், சிவ பெருமானை வழிபட கோவிலில் இருந்து சற்று தொலைவில் கைலாசநாதர் கோவிலையும் கட்டினார் மகாராஜா.
சுயம்பு அம்மன் -மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பாகும். மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு சாற்றப்படுகிறது.
விஷ்ணு துர்க்கைக்கும், அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.
அச்சமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும். அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புணுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும்.
தைலாபிஷேக நேரத்தில் அம்பாளின் உக்ரம் அதிகமாகும். அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். சுமார் 6 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன்.
அம்மை நோயானது 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.
கடவுள் வாகனங்களில் இயற்கை வடிவான வாகனங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன வாகனங்கள், கலப்பு வடிவ வாகனங்கள், பூத கின்னர வாகனங்கள், அபூர்வ வகை வாகனங்கள் கூட்டு வாகனங்கள் என பல வாகனங்கள் உள்ளன. இவையல்லாது, இறைவனும், இறைவியும் பல்லக்கில் பவனி வருவது என்பதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.
இதர வாகனங்களை காட்டிலும், இறைவனோ, இறைவியோ பல்லக்கில் பவனி வருகையில் அதிக அளவிலான அலங்காரங்களும், ஜொலிக்கும் மின் விளக்கு அலங்காரங்களும் பல்லக்கு வாகனத்தில் இருப்பது தனிச்சிறப்பு.
அதிலும் இரவு நேரத்தில் மின்னொளிப் பாய்ச்சலுடன், இறைவனையோ, இறைவியையோ சுமந்து வரும் பல்லக்கினைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் திரள்வது இன்றளவும் நடைபெற்று வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்று.
தமிழகத்திலேயே மிகச் சிறப்பாக முத்துப்பல்லக்கு திருவிழா நடைபெற்று வருவது, இக்கோவிலில் மட்டும்தான். மற்ற கோவில்களில் பல்லக்கு உற்சவங்கள் நடைபெற்றாலும், அவையெல்லாம் சிறிய அளவிலான பல்லக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும், புன்னைநல்லூர் உற்சவர் மாரியம்மன் பவனி வரும் முத்துப்பல்லக்கு மிகப் பிரமாண்டமானதாகும்.
இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சதாசிவ பிரம்மேந்திரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

மாரியம்மன் கோவிலின் முக்கிய குறிப்புகள்
* அம்மன் சுயம்பு வடிவாய் புற்று மண்ணால் ஆனவள்.
* சுமார் 6 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன்.
* அம்மனுக்கு தைல அபிசேகம் மட்டுமே. அபிசேகங்கள் கிடையாது.
* உள்தொட்டி நிரப்புதல் என்பது இங்கு சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை ஆகும்.
* அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோருக்கு குணமாகி விடுகிறது.
* கண்ணைக் கவரும் மராத்திய மன்னர்களது ஓவியங்கள் நிறைந்த வெளிமண்டபம் கோவிலுக்குள் நுழைந்தவுடன் காணப்படுகிறது.
* இங்கு உட்பிரகாரத்தில் எழுந்தருளி இருக்கும் பாடகச்சேரி தவத்திரு ராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசகராக இருந்து குறைவிலா அன்னதானம் செய்ததுடன் தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார்.
* ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் மாரியம்மன் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
* ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் கோவில் இது.
* புகழ் பெற்ற பிரார்த்தனை தலமான இக்கோவி லுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வருவது வழக்கம்.
* புன்னைநல்லூர் சுற்று வட்டாரத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாசி முதல் பங்குனி மாதம் வரை அணி, அணியாகவும், அமைப்புக்கள் சார்பாகவும் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து இங்குள்ள விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்துகிறார்கள்.
* சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில் இக்கோவிலுக்கு மகா மண்டபமும் 2-வது பெரிய பிரகாரத்திற்கு சுற்றுச்சுவரும்கட்டிக்கொடுத்தார்.
- 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.
- ஓம் சக்தி.. பராசக்தி... என்ற பக்தி கோஷங்கள் விண்ணையே முட்டும் அளவுக்கு அதிர்ந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலில் உள்ள கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பது தனி சிறப்பு வாய்ந்தது.
இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 21 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு திருப்பணிகளுடன் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் செய்வதற்காக 41 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாக சாலை அமைக்கப்பட்டது. இங்கு கடந்த 3-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.
கடந்த 7-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன.
இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது.
பின்னர், யாகசாலையில் இருந்து மாரியம்மன் மற்றும் பரிவார கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மேளவாத்தியங்களுடன் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் தலையில் புனிதநீர் சுமந்து வந்தனர்.
தொடர்ந்து, புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சரியாக 10 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் மற்றும் ராஜ கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.
அந்த நேரத்தில் வானில் கருடன் வட்டமிட்டது. பின்னர், மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய புன்னைநல்லூர் மாரியம்மா.. ஓம் சக்தி.. பராசக்தி... என்ற பக்தி கோஷங்கள் விண்ணையே முட்டும் அளவுக்கு அதிர்ந்தது. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் ஷவர் மூலம் தெளிக்கப்பட்டது.
குடமுழுக்கு விழாவை யொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவுப்படி ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் இன்று இரவு 7 மணிக்கு மாரியம்மன் திருவீதிஉலா நடைபெற உள்ளது. நாளை முதல் மண்டலாபிஷே பூஜைகள் நடைபெறும்.