search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டயப்பரால் ஏற்படும் பாதிப்பு"

    • 24 மணி நேரமும், குழந்தைக்கு டயப்பர் அணிவிக்க தொடங்கி விட்டார்கள்.
    • சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள் அதிகரிக்கும்.

    சவுகரியம் கருதி இன்று பலரும் குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே 24 மணி நேரமும், குழந்தைக்கு டயப்பர் அணிவிக்க தொடங்கி விட்டார்கள். அடிக்கடி மாற்ற தேவை இல்லை என்பதாலும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் குழந்தையின் தூக்கம் பாதிக்காமல் இருக்கும் என்றும், வெளியே செல்லும்போதும் அதனை உபயோகிக்கிறார்கள்.

    அதிக செயற்கை பொருட்களாலான டயப்பர்களை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும். ஈரமான டயப்பர்கள், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களையும், சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள் அதிகரிக்கவும் வழி வகுக்கின்றன. நாள் முழுவதும் டயபர்களை உபயோகப்படுத்துவதால், அவர்களுக்கு தோலில் அழற்சி, வெடிப்பு மற்றும் எரிச்சல் உண்டாக்கலாம்.

    தற்போது காட்டன் டயப்பர்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை துவைத்து திரும்பவும் உபயோகப்படுத்த முடியும். அது குழந்தைகளின் தோலுக்கும் எந்தவித கெடுதலும் செய்யாது. இதன் பயன்பாட்டை அதிகப்படுத்தலாம். துணியால் ஆன டயப்பர்கள் செலவை மிச்சப்படுத்தும்.

    இன்றைய அவசரமான உலகில் அனைத்து மாடர்ன் அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிப்பது வழக்கமாகி விட்டது. அதில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப்பொருள் கலந்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

    சிலர் ஒரு நாள் முழுவதும் கூட இதனை பயன்படுத்துவர். அவர்கள் துணியினை பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் என்றும் சுத்தமாக இருக்காது என்றும் கருதுகின்றனர். ஆனால், இது போல் டயாபர்களை அணிவிப்பதால் குழந்தைகளுக்கு தீங்கு உண்டாகும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த டயாபர்களில் விஷப்பொருள் கலந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    டெல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டது. அவரகள் பல மாதிரிகளை எடுத்துள்ளனர். அதில் அவர்களுக்கு பல அதிர்ச்சிகரமான முடிவுகள் தெரியவந்துள்ளது. அவர்கள் ``குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக விற்கப்படும் இந்த டயாபர்களில் ப்தலேட் எனப்படும் விஷப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது."

    இவை குழந்தைகளின் உடல் நலனை பெரிதும் பாதிக்கும். சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் தாய்மார்கள் கொஞ்சம் கவனத்துடன் இருப்பது நல்லது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    டயாபர்களில் இது போன்ற வேதிப்பொருளை பயன்படுத்த சீனா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     டயப்பரை எப்போது மாற்ற வேண்டும்?

    ஈரம் கசிந்தால், அல்லது டயப்பர் கனமாக தெரிந்தால், குழந்தை மலம் கழித்து விட்டால், துர்நாற்றம் வருகையில், குழந்தை விடாத அழுது கொண்டிருந்தால் டயப்பர்களை உடனே மாற்ற வேண்டும். குறைந்தது 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

    ×