என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வங்காளதேசம் இலங்கை டெஸ்ட்"
- விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், கசுன் ரஜிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- தைஜுல் இஸ்லாம் அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்தார்.
வங்காளதேசம்- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சியால்ஹெட்டில் நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 280 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா 102 ரன்கள் அடித்தனர்.
பின்னர் வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. மெஹ்முதுல் ஹசன் ஜாய் 9 ரன்னுடனும், தைஜுல் இஸ்லாம் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது. தைஜுல் இஸ்லாம் அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்தார். இலங்கை அணி சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், கசுன் ரஜிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
92 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.