என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நடிகர் கோவிந்தா"
- மும்பை, ஜூஹூ [Juhu] பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் இந்த விபத்து நடந்துள்ளது.
- அவரது காலில் பாய்ந்த குண்டு டாக்டர்களால் நீக்கப்பட்டது
பாலிவுட் நடிகர் கோவிந்தா தனது ரிவால்வர் துப்பாக்கியால் அவரது காலிலேயே தவறுத்தலாக சுட்டுக்கொண்டதால் குண்டடிபட்டு படுகாயம் அடைந்துள்ள்ளார். கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள 6 மணி விமானம் ஏறுவதற்கு இன்று அதிகாலை 4.45 மணியளவில் மும்பை, ஜூஹூ [Juhu] பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
உடனே மருத்துமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் காலில் பாய்ந்த குண்டு டாக்டர்களால் நீக்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கோவிந்தாவின் மேனேஜர் சசி சின்ஹா தெரிவித்துள்ளார்.
லைஸ்சன்ஸ் பெற்று கோவிந்தா வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அவரது காலில் குண்டு பாய்ந்ததாக மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். 1990 களில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக கோவிந்தா வலம்வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவிந்தாவின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டது.
- அரசியலில் மீண்டும் நுழைந்து தேர்தலில் போட்டியிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலிவுட் திரைப்படங்களில் பிரேக் டான்ஸ் ஆடி புகழ்பெற்றவர் நடிகர் கோவிந்தா. கடந்த 1980-ம் ஆண்டு முதல் இவர் 165 திரைப்படங்களில் நடித்து உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தவர், வடக்கு மும்பையில் போட்டியிட்டு வென்றார். இங்கு 5 முறை பா.ஜ.க. எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய மந்திரி ராம் நாயக்கை சுமார் 50 ஆயிரம் வாக்குகளில் தோல்வியுறச் செய்தார்.
பாராளுமன்ற கூட்டங்களுக்கு வராமல் இருந்தவர் மீது கடும் விமர்சனங்கள் கிளம்பின. கோவிந்தாவின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் 2009-ல் அவர் அரசியலில் இருந்து விலகி நடிப்பைத் தொடர்ந்தார்.
தற்போது மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். பா.ஜ.க. ஆதரவில் ஆட்சி செய்யும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை நேற்று முன்தினம் நடிகர் கோவிந்தா சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் அரசியலில் மீண்டும் நுழைந்து தேர்தலில் போட்டியிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடமேற்கு மும்பை தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக கஜனன் உள்ளார். ஏக்நாத் பிரிவு சிவசேனாவில் இருப்பவர்களுக்கு அங்கு மீண்டும் வாய்ப்பளிக்க அவரது கட்சி விரும்பவில்லை. இதனால் அந்த தொகுதியை முக்கியக் கூட்டணியான பா.ஜ.க. தன்வசப்படுத்த முயன்றது. இப்போது நடிகர் கோவிந்தாவின் அரசியல் மறுநுழை வால் சூழல் மாறியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்