என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்"
- ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரெயிலை முதன் முதலில் பெர்லினில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.
- கடந்த 20-ந்தேதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கியது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருள் பயணிகள் ரெயில் 2 நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரெயிலை முதன் முதலில் பெர்லினில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.
அதன் பிறகு பல முறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளுக்கு பிறகு ஒரு முழு ஹைட்ரஜன் டேங்க் மூலம் 1,741 மைல்கள் (2,803 கிலோ மீட்டர்) பயணம் செய்துள்ளது. கடந்த 20-ந்தேதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கியது.
இதுகுறித்து ஸ்டாட்லர் நிறுவன துணைத் தலைவர் டாக்டர். அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறுகையில், இந்த உலக சாதனையானது எங்கள் ஹைட்ரஜன் ரெயிலின் சிறந்த செயல் திறனை காட்டுகிறது. இது மகத்தான சாதனை ஆகும். மற்றொரு உலக சாதனை படைத்ததில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றார்.