என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதீப் ரங்கனாதன்"

    • இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'.
    • 'டிராகன்' திரைப்படம் கடந்த 21-ந்தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியானது.

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.திரைப்படம் வெளியாகி உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.

    'டிராகன்' திரைப்படம் கடந்த  21-ந்தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற Rise Of Dragon வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலில் கவுதம் மேனன் மற்றும் பிரதீப் இணைந்து ஆடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    • கிருத்தி செட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
    • அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்

    தமிழ் சினிமாவில் ஃபீல் குட் மற்றும் காமெடி படங்களை எடுப்பதில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். நானும் ரவுடி பட வெற்றிக்குப் பிறகு இவரின் புகழ் உச்சத்திற்கு சென்றது. படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    பின், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். 2022ம் ஆண்டு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார். சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து இருந்தனர். இந்த படத்தில் இவர்களின் ஜோடி மிக அழகாக திரையில் பிரதிபலித்து இருந்தார்.

    இந்நிலையில் அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கி நடித்து மக்கள் மனதை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல் ஐ சி (லவ் இன்ஷூரன்ஸ் கார்பரேஷன்) படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது. பிறகு, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை.

    கிருத்தி செட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அனீருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் படப்பிடிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியதாக விக்னேஷ் சிவன், அவரின் மகனான உயிர் மற்றும் உலகுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரதீப் ரங்கதான் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் எல்.ஐ.சி படத்தில் சோபா பாய் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
    • பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.

    சென்ஷேசன், குட்டி ஸ்டார் ஷோபா பாய் நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக, டோங்லி ஜம்போ இயக்கத்தில், இசையமைப்பாளர் சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு ஆல்பம் பாடல் யூடியுபில் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம் இணையம் முழுக்க பிரபலமானவர் குட்டி ஸ்டார் ஷோபா பாய். கண் இமைக்கும் ஸ்பீடில், கடகடவென பேசி, மயக்கும் குரலில் இவர் அசத்திய ஷோபா விற்பனை வீடியோ பெரும் வைரலாக, ஒரே நாளில் மிகப்பெரியளவில் பிரபலமானார். பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.

    பிரதீப் ரங்கதான் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் எல்.ஐ.சி படத்தில் சோபா பாய் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    தற்போது அதன் அடுத்த கட்டமாக சுயாதீன இசை ஆல்பங்கள் வெளியீட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் பீ-ரெடி மியூசிக் நிறுவனம், ஷோபா பாய் நடிப்பில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

    தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களின் வரவேற்பில், முதல் இடம் பிடித்து வைரலாகி வருகிறது.

    முதல்முறையாகத் தமிழில், குழந்தைகள் நடிப்பில், குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருப்பது இப்பாடலின் சிறப்பு என்றாலும், இப்பாடல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார்.
    • இது ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 26 - வது படமாகும்.

    கடந்த 2020 - ஆண்டு பிப் -14 ந்தேதி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'ஓ மை கடவுளே' காதல் நகைச்சுவை படம் வெளியாகி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இது ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 26 - வது படமாகும்.

    இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கியது. இந்த புதிய படத்திற்கு 'டிராகன்' என "டைட்டில்" வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர் நடிக்கின்றனர்.

    பிரதீப் ரங்கனாதனும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதீப் ரங்கனாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் `ஒருவன் என்று தான் ஒரு உச்சத்தை தொட முடியும் என நம்புகிறானோ அப்பொழுது தான் ஒரு ஸ்டார் பிறக்கிறான்" என்று எழுதியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்துள்ளனர்.

    கடந்த 2020 - ஆண்டு பிப் -14 ந்தேதி காதலர் தினத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'ஓ மை கடவுளே' காதல் நகைச்சுவை படம் வெளியாகி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 26 - வது படமாகும்.

    இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

    படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்தனர். மேலும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர் நடிக்கின்றனர் படத்தின் நடிக்கப் போகும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11, மதியம் 3 மட்டும் மாலை 6 மணி என மூன்று போஸ்டர்களை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ல்வ் இன்ஷூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கனாதன் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×