search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேல் ஸ்டைன்"

    • இவர் 155.8 கிமீ வேகத்தில் வீசிய பந்து இந்த தொடரில் வீசப்பட்ட வேகமான பந்து என்ற சாதனையை படைத்தது
    • லக்னோ அணியில் அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    பேட்டிங்கை துவங்கிய லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. 200 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

    இதன் மூலம் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோசின் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    குறிப்பாக இவர் 155.8 கிமீ வேகத்தில் வீசிய பந்து இந்த தொடரில் வீசப்பட்ட வேகமான பந்து என்ற சாதனையை படைத்தது. தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்தில் அவர் பந்துவீசி பஞ்சாப் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதனால் தான் லக்னோ அணியில் அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    அதன் பின்னர் பேசிய அவர், தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைன் தான் தம்முடைய ரோல் மாடல் என்று கூறினார் . மேலும் காயத்தை சந்தித்திருக்காமல் போயிருந்தால் கடந்த வருடமே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி விளையாடியிருப்பேன் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மயங்க் யாதவை தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டைன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "மணிக்கு 155.8 கி.மீ வேகம். மயங்க் யாதவ், நீங்கள் எங்கே ஒளிந்திருந்தீர்கள் என்று வியப்புடன் பாராட்டியுள்ளார்.

    மேலும் மயங்க் யாதவ் பற்றி ஆஸ்திரேலியா முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தன்னுடைய ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளரை கண்டு பிடித்துள்ளது. மயங்க் யாதவ், மிரட்டலான வேகம். மிகவும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    ×