என் மலர்
நீங்கள் தேடியது "போதைப்பொருள் வழக்கு ஜாபர் சாதிக்"
- ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்தனர்.
- போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
டெல்லியில் 3 தமிழர்கள் போதைப் பொருளுடன் பிடிபட்ட நிலையில் அதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்து ஏப்ரல் 2-ந்தேதி அமீர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் சற்றுமுன் டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரபாகரனுடன் ஆஜராகியுள்ளார்.