என் மலர்
நீங்கள் தேடியது "நிதிஷ் கமார்"
- கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் பிரதமர் மோடி இருந்து வருகிறார்.
- இந்த 10 வருடத்தில் அவர் பீகார் மாநிலத்திற்காக மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளார்.
பீகார் மாநிலம் ஜமுய்-ல் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வரும், பிரதமர் மோடியும் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் பிரதமர் மோடி இருந்து வருகிறார். இந்த 10 வருடத்தில் அவர் பீகார் மாநிலத்திற்காக மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளார். நாட்டிற்காகவும் பணியாற்றியுள்ளார். எங்களுடைய பதவி காலத்தில் இந்து-முஸ்லிம் கலவரம் நிறுத்தப்பட்டுள்ளது.
தவறுதலாக கூட எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால், மீண்டும் அந்த கலவரங்கள் தொடங்கிவிடும் என்பதை இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் மோடி பேசும்போது "முழு அக்கறையுடன் ராம் விலாஸ் பஸ்வானின் சிந்தனைகளை என்னுடைய இளைய சகோதரர் முன்னெடுத்துச் செல்வதில் முழு திருப்தி அடைகிறேன். ஒட்டுமொத்த நாட்டிற்கும் பீகார் வழிகாட்டியது. ஆனால் துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு 5-6 பீகார் தலைமுறையினருக்கு நீதி கிடைக்கவில்லை" என்றார்.