என் மலர்
நீங்கள் தேடியது "மனைவி மிரட்டல்"
- இருதரப்பு புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மிரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோண்டா:
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சவுரவ் சுக்லா என்பவரை அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகிலுடன் சேர்ந்து கொலை செய்து தண்ணீர் நிரப்பி வைக்கப்படும் பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கணவருடன் தகராறில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை, அதிகமாக பேசினால் மீரட் படுகொலை போன்றே உன்னையும் வெட்டி டிரம்மில் அடைத்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கோண்டா பகுதியை சேர்ந்தவர் என்ஜினீயர் தர்மேந்திர குஷ்வாஹா. இவரும், பஸ்தி மாவட்டத்தை சேர்ந்த மாயா மவுரியா என்பவரும் காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.
என்ஜினீயர் தர்மேந்திர குஷ்வாஹா தனது மனைவி பெயரில் நிலத்தை வாங்கி வீடு கட்டுவதற்கான ஒப்பந்ததை தனது உறவினரான நீரஜ் மவுரியாவிடம் கொடுத்தார். அதன்பிறகு மாயாமவுரியா, நீரஜூடன் நெருங்கி பழகினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவரும் நெருக்கமாக இருப்பதை தர்மேந்திர குஷ்வாஹா பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் மனைவியிடம் கேட்டபோது, அவரும் நீரஜூம் சேர்ந்த தர்மேந்திர குஷ்வாஹாவை தாக்கி உள்ளனர். மேலும் மாயா வீட்டில் இருந்து நகை, பணத்துடன் தலைமறைவானார். இதுதொடர்பாக குஷ்வாஹா போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாயா வீட்டுக்கு வந்தார். அப்போது தர்மேந்திர குஷ்வாஹா மற்றும் அவரது தாய் ஆகியோரை மாயா மவுரியாவும், நீரஜூம் சேர்ந்து தாக்கி உள்ளனர்.
மேலும் தர்மேந்திர குஷ்வாஹாவை பார்த்து, நீ அதிகமாக பேசினால், மீரட் படுகொலை போல உன்னையும் வெட்டி டிரம்மில் அடைத்துவிடுவேன் என மாயா மிரட்டி உள்ளார்.
இதற்கிடையே தனது கணவர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும், அவர் தன்னை நான்குமுறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் மாயா கூறினார்.
இருதரப்பு புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாயா தர்மேந்திர குஷ்வாஹாவை மிரட்டிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.