search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹரப்பா நாகரிகம்"

    • வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
    • அம்பேத்கர் குறித்த குறிப்புகள் புதிய பாடப்புத்தகத்தில் நீக்கப் பட்டுள்ளது.

    புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 6 ஆம் வகுப்பு என்சிஆர்டி  சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து பல்வேறு பாடப்பகுதிகள் நீக்கப்பட்டு வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வரலாறு தொடர்பான சில தொடர்களுக்கு  புதிய பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது .

    அந்த வகையில் ஹரப்பா நாகரிகம் என்பதற்கு பதிலாக சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்று பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரஸ்வதி ஆற்றில் இருந்தே இந்திய நாகரிகம் உருவாகியுள்ளதாக புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழைய பாடப்புத்தகத்தில் ரிக் வேத காதலத்தில் ஓடிய பல நதிகளில் சரஸ்வதியும் ஒன்று என்று ஒரே ஒரு இடத்தில மட்டுமே குறிப்பிடபட்டிருந்தது. ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு சரஸ்வதி ஆறு வற்றியதே காரணம் என்று புதிய பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பழைய புத்தகத்தில் ஹராப்பா நாகரிக வீழ்ச்சிக்கான காரணங்களில் சரஸ்வதி ஆறு வற்றியது இடம்பெறவில்லை.

    மேலும் வரலாறு, புவியியல் மற்றும் குடிமையியல் ஆகியவற்றிற்கு தனித்தனியாக புத்தகங்கள் இருந்த நிலையில் தற்போது அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே புத்தகமாக கொண்டுவந்துள்ளது. பாஜக அரசு 2023 ஆம் ஆண்டு கொண்டுவந்த தேசிய கல்வித் திட்ட வடிவமைப்பின்படி இந்த மாற்றங்கள் செய்யுயப்பட்டுள்ளன. மேலும் சம்ஸ்கிருத வார்த்தைகள் பலவும் புதிய பாடப்புத்தகத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளன.

    கிரீன்விச் மெரிடியன் உலகின் முதன்மை மெரிடியன் கிடையாது என்றும் அதற்கு முன்னதாகவே பூமியின் மத்திய ரேகை உஜ்ஜையின் வழியாக கடப்பதை கணக்கிட்டு உஜ்ஜைன் மெரிடியன் இருந்து வந்தது என்றும் புதிய பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை பாடத்தில் பல குறிப்புக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஏற்றதளவு குறித்த பாடத்தில் இடம்பெற்றிருந்த அம்பேத்கர் பற்றிய குறிப்புகள் புதிய பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய வரலாற்றுத் திரிபுகள்பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

    • ஹரப்பா நாகரிகத்தின் வழித்தோன்றல்களே தற்போதைய இந்தியர்கள்.
    • புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டம்.

    கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹரப்பா நாகரிகத்தின் தோற்றம் மற்றும் வீழ்ச்சி பற்றிய வரலாற்று பாடத்தில் புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

    அதில், அரியானாவில் உள்ள சிந்து சமவெளி தளமான ராகிகர்ஹியில் உள்ள தொல்பொருள் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட பண்டைய டி.என்.ஏ பற்றிய சமீபத்திய ஆய்வுகள், ஹரப்பான்களும் வேதகால மக்களும் ஒரே மாதிரியானவர்களா என்பது பற்றிய கூடுதல் ஆராய்ச்சிக்கு ஆரிய குடியேற்றத்தை நிராகரித்தது.

    ஹரப்பா நாகரிகத்தின் வழித்தோன்றல்களே தற்போதைய இந்தியர்கள். ஆரிய படையெடுப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி என்.சி.இ.ஆர்.டி அமைப்பு புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது

    '5,000 ஆண்டுகாலமாக எந்த இடறுமின்றி இந்திய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்' என என்.சி.இ.ஆர்.டி 12-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

    'ஹரப்பா மக்களின் மரபணு இன்று வரை தொடர்கிறது. மேலும், தெற்காசிய மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் ஹரப்பா மக்களின் வழித்தோன்றல்களே', என என்.சி.இ.ஆர்.டி கூறுகிறது

    ஆரம்ப கால ஹரப்பா மற்றும் பிற்பகுதி ஹரப்பா நாகரிகங்களுக்கு இடையே 'இடைவெளி இருந்தது' பற்றிய தகவல்களும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்டுள்ளன.

    'ஹரப்பன்களுக்கும் வைதீக (Vedic) மக்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்' என்பதை வலியுறுத்தியும் புதிய பாடத்தில் என்.சி.இ.ஆர்.டி சேர்த்துள்ளது.

    ஆரியர்களின் குடியேற்றத்தை நிராகரிக்க (அரியானா) ராக்கிகர்கி தளத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சியை என்.சி.இ.ஆர்.டி குறிப்பிடுகிறது

    இந்தப் புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த என்.சி.இ.ஆர்.டி திட்டமிட்டுள்ளது.

    ×