என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ் தேர்தல் அறிக்கை"
- காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.
- பா.ஜனதா விமர்சித்து வரும் நிலையில், இதுதான் எங்கள் கதாநாயகன் என இந்தியா கூட்டணி தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த முறை 28 இடங்களில் 26 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. இந்த முறை அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது.
தற்போது மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் பல சலுகைகள் தொடர்பான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இது தங்களுக்கு சாதமாக அமையும் என இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் நம்புகின்றன.
கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கர்நாடகா மாநில முதல்வருமான சித்தராமையா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் மதசார்பற்ற கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "உறுதியாக ஆட்சிக்கு வர முடியாத என்ற கட்சியால் மட்டுமே இவ்வறு வாக்குறுதிகளை அளிக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
- இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது - மோடி
- முஸ்லீம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார் - காங்கிரஸ்
பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் "காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. மேலும் கம்யூனிஸ்டு மற்றும் இடது சாரி சிந்தனைகள் மேலோங்கி உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக மோடி கூறிய விமர்சனத்திற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில், "பிரதமரின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது. முஸ்லீம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார். மத அரசியலை முன்வைத்து நாட்டில் பிளவுவாதத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இவ்வாறு மோடி பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாளுக்கு நாள் பாஜனதாவின் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது.
- இதனால் பா.ஜனதா அவற்றின் நெருங்கிய நண்பரான முஸ்லிம் லீக்கை நினைவு கூறத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய முஸ்லிம் லீக் சித்தாந்தத்தை ஒத்திருப்பதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது-
பிரதமர் மோடி- அமித் ஷா ஆகியோரின் அரசியல் மற்றும் சித்தாந்த முன்னோடிகள் சுதந்திர போராட்டத்தின் போது பிரட்டிஷ், முஸ்லிம் லீக்கை ஆதரித்தனர். இன்று கூட காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக முஸ்லிம் லீக்கை தூண்டி விடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சாமானிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உள்ளது
1942-ல் இந்தியனே வெளியேறு என்ற மகாத்மா காந்தியின் அழைப்பை மோடி- அமித் ஷாவின் சித்தாந்த முன்னோடிகள் எதிர்த்தனர்
வெள்ளையனே வெளியேறு போராட்டம் எப்படி நடத்தலாம்? காங்கிரஸ் கட்சியை எப்படி அடக்கலாம்? என சியாம பிரசாத் முகர்ஜி பிரிட்டிஷ் கவர்னருக்கு கடிதம் எழுதவில்லையா? மேலும் இந்தியர்கள் பிரிட்டிஷ் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என கூறவில்லையா?
மோடி மற்றும் அமித் ஷா, அவர்கள் நியமித்த தலைவர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் பேச்சில் ஆர்.எஸ்.எஸ். வாடை வீசுகிறது. நாளுக்கு நாள் பா.ஜனதாவின் வாய்ப்பு இறங்கி கொண்டே வருகிறது. இதனால் பா.ஜனதா அவற்றின் நெருங்கிய நண்பர்களான முஸ்லிம் லீக்கை நினைவு கூறத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் தேர்தலில் அறிக்கை 140 கோடி மக்களின் நம்பிக்கை மட்டும் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது. அவர்களின் வலிமை மோடியின் 10 ஆண்டுகால அநீதியை முடிவுக்கு கொண்டு வரும்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் அதிகாரத்திற்கு வருவதற்கு சமூகத்தை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டது.
- இந்த தேர்தல் அறிக்கை இந்தியாவில் நடைபெறும் தேர்தலுக்கானது போன்றது இல்லை.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்க பொருத்தமானது என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் அதிகாரத்திற்கு வருவதற்காக சமூகத்தை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டது. இந்த திருப்திபடுத்தும் அரசியலைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். இந்த தேர்தல் அறிக்கை இந்தியாவில் நடைபெறும் தேர்தலுக்கானது போன்றது இல்லை. பாகிஸ்தானுக்கானது. சமூகத்தை பிளவுப்படுத்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் காங்கிரசின் மனநிலை" என்றார்.
பிரதமர் மோடியும் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக, முஸ்லிம் லீக்கின் சிந்தனையை ஒத்திருப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முஸ்லிம் லீக்கின் சிந்தனை ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது- மோடி
- வங்காளத்தில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தவர், அப்போது இந்து மகாசபையின் தலைவரான முகர்ஜி- காங்கிரஸ்
பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் "காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. மேலும் கம்யூனிஸ்டு மற்றும் இடது சாரி சிந்தனைகள் மேலோங்கி உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு அவருடைய வரலாறு தெரியவில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக கூறுகையில் "பிரதமர் மோடிக்கு அவருடைய வரலாறு தெரியவில்லை. உண்மையில், வங்காளத்தில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தவர், அப்போது இந்து மகாசபையின் தலைவரான முகர்ஜியைத் தவிர வேறு யாரும் இல்லை. பிரித்தாளும் அரசியலை நம்புவதும் நடைமுறைப்படுத்துவதும் பாஜக-தான், காங்கிரஸ் அல்ல." எனத் தெரிவித்துள்ளார்.
- பல தசாப்தங்களாக நாட்டை ஆண்ட காங்கிரஸ், இன்று நீதி பற்றி பேசுகிறது.
- வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே இதுபோன்ற தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை "பொய்களின் மூட்டை" என்று கூறிய பாஜக, "பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த பெரும் பழமையான கட்சி அதன் முந்தைய சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறியதாவது:-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டை. வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக நாட்டை ஆண்ட காங்கிரஸ், இன்று நீதி பற்றி பேசுகிறது. ஆனால் அதன் அரசு ஆட்சியில் இருந்தபோது நியாயம் செய்யவில்லை.
முந்தைய சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் அறிக்கைகளில் அளித்த வாக்குறுதிகள் எதையும், காங்கிரஸ் நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து உயர்த்தப்படும்.
- நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் முன்னாள் நிதியமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் அதில் உள்ள முக்கியம்சங்களை குறிப்பிட்டு பேசினார்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து உயர்த்தப்படும்.
மத்திய அரசு பணியிடங்களில் காலியாக உள்ள 30 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்.
நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும் போன்றவை தேர்தல் அறிக்கையில் இடம் பிடித்திருந்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்