என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உகாதி"

    • வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • மகிழ்ச்சியான உகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தென்னிந்திய மாநிலங்களில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் ஒன்று யுகாதி பண்டிகை. இது தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று யுகாதி திருநாள் கொண்டாடப்படுவதை அடுத்து, தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட சகோதர, சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் அனைத்து திராவிட சகோதர சகோதரிகளுக்கும் எனது மகிழ்ச்சியான உகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு போன்ற வளர்ந்து வரும் மொழியியல் மற்றும் அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, தெற்கு ஒற்றுமைக்கான தேவை இதற்கு முன்பு இருந்ததில்லை. நாம் ஒன்றிணைந்து நமது உரிமைகள் மற்றும் அடையாளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் தோற்கடிக்க வேண்டும்.

    இந்த உகாதி நம்மை ஒன்றிணைக்கும் எதிர்ப்பு மற்றும் ஒற்றுமையின் உணர்வைத் தூண்டட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதரர்களின் புத்தாண்டாக, வசந்த காலத்தின் தொடக்க நாளாக, விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அனைவர் வாழ்விலும், புகழும் செல்வமும் பெருகவும், மகிழ்ச்சி நிறையவும் புத்தாண்டில், இறைவன் அருளினால் அனைத்தும் நிறைந்திருக்க வேண்டிக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள உகாதி வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    உலகெங்குமுள்ள தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு தமிழ்நாடு பா.ஜனதா சார்பாக, இனிய உகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உகாதி பண்டிகை, பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழிக்கும், கலைக்கும், நம் மண்ணுக்கும் தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் நம் தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதரர்களின் புத்தாண்டாக, வசந்த காலத்தின் தொடக்க நாளாக, விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த இனிய உகாதி தினத்தில், அனைவர் வாழ்விலும், புகழும் செல்வமும் பெருகவும், மகிழ்ச்சி நிறையவும் புத்தாண்டில், இறைவன் அருளினால் அனைத்தும் நிறைந்திருக்க வேண்டிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×