என் மலர்
நீங்கள் தேடியது "விஜயகாந்த் வியாஸ்காந்த்"
- 30 வருடத்திற்குப் பிறகு ஜாஃப்னாவில் இருந்து கிரிக்கெட்டிற்கு வந்த வீரர்.
- கடந்த வருடம் ராஜஸ்தான் அணியின் நெட் பவுலராக இருந்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இலங்கையின் வணிந்து ஹசரங்கா இடம் பிடித்திருந்தார். இவர் ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் அணியில் இணைவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காயம் காரணமாக ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவருக்குப் பதிலாக 22 வயது இளம் வீரரான மற்றொரு இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் மாற்று வீரரான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்துள்ளார். இவர் ஒரேயொரு டி20 போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.
லங்கா பிரீமியர் லீக்கில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக தனது 18 வயதில் 2020-ம் ஆண்டு விளையாடினார். 30 வருடத்திற்குப் பிறகு இலங்கையின் வடக்குப் பகுதியான ஜாஃப்னா பகுதியில் இருந்து வந்த முதல் வீரர் ஆவார்.
கடந்த ஐபிஎல் தொடரின்போது குமார் சங்கக்கரா இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நெட் பவுலராக கொண்டு வந்தார். தற்போது முத்தையா முரளீதரன் அவரை ஐபிஎல் அணிக்கு கொண்டு வந்துள்ளார். வங்காளதேசம் பிரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார். மொத்தமாக 33 டி20 போட்டியில் விளையாடி 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் ரிஸ்ட் லெக் ஸ்பின்னர் ஆவார்.