என் மலர்
நீங்கள் தேடியது "நானா படோல்"
- பட்னாவிசுக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல் வெளியானது.
- ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.
முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்று கொண்டார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்று கொண்டனர்.
இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசுக்கும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உங்களுக்கு பிரச்சனை கொடுத்தால், எங்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமாறு துணை முதல்வர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் நானா படோல் அழைப்பு விடுத்துள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நானா படோல், "ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம். தேவேந்திர ஃபட்னாவிஸ் உங்களை தொந்தரவு செய்தால், நாங்கள் உங்களுடன் நின்று ஒன்றாக ஒரு அரசாங்கத்தை அமைக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
நானா படோலின் கருத்துக்கு பதில் கூற மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் மறுத்துவிட்டார்.
- நானா படோலின் கார் பாந்த்ரா அருகே பில்வாரா கிராமத்தில் விபத்தில் சிக்கியது.
- பிரசாரம் முடிந்து திரும்பிய நிலையில் லாரி ஒன்று திடீரென மோதியது.
மும்பை:
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார் நானா படோல்.
இந்நிலையில், நானா படோலின் கார் பாந்த்ரா நகருக்கு அருகில் உள்ள பில்வாரா கிராமத்தில் விபத்தில் சிக்கியது. விசாரணையில் பிரசாரம் முடிந்து திரும்பிய நிலையில் லாரி ஒன்று திடீரென மோதியது தெரிய வந்தது.
இந்த விபத்தில் நானா படோலே அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமின்றி உயிர் தப்பினார். வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், இந்த விபத்தில் அவரது கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அவரை கொல்ல முயற்சியா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
- மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி 220க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியது.
- இத்தேர்தலில் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் உள்ளனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 220க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ஏராளமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் உள்ளனர்.
இந்நிலையில், சகோலி சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் நானா படோல் பா.ஜ.க. வேட்பாளரை 208 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இதேபோல், மால்கான் மத்தி தொகுதியில் போட்டியிட்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளர் 162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.