என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெடுவிளை பத்திரகாளி அம்மன் கோவில்"

    • பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி நடத்தி வைக்கிறார்.
    • பங்குனி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது.

    நாகர்கோவில்:

    பைங்குளம் அருகே கீழமுற்றம் பகுதியில் உள்ள நெடுவிளை பத்திரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் பங்குனி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை நண்பகல் 12 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி நடத்தி வைக்கிறார். தொடர்ந்து அன்னதானம், பஜனை, மாலை லட்சுமி பூஜை ஆகியவை நடக்கிறது.

    பங்குனி திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்கள் தினமும் காலை நவ கலச பூஜை, அம்மனுக்கு பால் மற்றும் கலசாபிஷேகம், உஷபூஜை, சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை, தீபாராதனை, இரவில் சிறப்பு பூஜை, புஷ்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 13-ந் தேதி சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், இரவு சமய மாநாடு, 14-ந்தேதி பால்குட ஊர்வலம் தொடர்ந்து அம்மனுக்கு நெய், தேன், தயிர், பால், இளநீர் அபிஷேகம், 15-ந் தேதி அம்மனுக்கு களபாபிஷேகம், இரவு மகளிர் சமய வகுப்பு மாநாடு, பரிசு வழங்குதல், 16, 17-ந் தேதிகளில் அம்மனுக்கு குங்குமம், சந்தனத்தால் அபிஷேகம், 18-ந் தேதி இரவு அம்மனுக்கு பூப்படைப்பு, நள்ளிரவில் சிறப்பு பூஜை, 19-ந் தேதி காலை அம்மனுக்கு பூப்படைப்பு, பகலில் இசக்கியம்மன் கோவில் நேர்ச்சைகள், இசக்கியம்மனுக்கு பூப்படைப்பு, சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    ×