என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கண் சோர்வு"
- நம்மில் எத்தனை பேருக்கு கண்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறித்து தெரியும்?
- எழுத்துக்களை நல்ல பெரிய எழுத்துருக்களில் படிக்கவும்.
இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் கையிலும் செல்போன்கள் வந்து விட்டன, இதன் கூடவே கண்கள் சோர்வு வந்துவிட்டது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்குதலுக்கு பிறகு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் மோகத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். மொபைல் ஃபோன், லேப் டாப், ஐ பேட் என வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து கேட்ஜட்களும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
அதில் முதன்மை வகிப்பது மொபைல் போன்கள் தான். என்னதான் உலகை ஒரு சிறு பெட்டிக்குள் அவை இணைத்தாலும், அதற்கான பின்விளைவு களையும் நாம் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. அதுவும் முக்கியமாக பாதிப்பை ஏற்படுத்தும் பகுதி என்றால் அவை கண்கள்தான்.
உலகத்தில் எங்கோ ஓர் மூலையில் நடப்பதை உடனடியாக பார்க்க முடியாத விஷயங்களை கூட நம்மை பார்க்க வைக்கும் இந்த எலக்ட்ரானிக் டிவைஸ்களால் நாளடைவில் நம்மை நிரந்தரமாக பார்வையே இல்லாமல் கூட செய்ய முடியும்.
மன அழுத்தம், ரத்த அழுத்தம் பற்றியெல்லாம் கேள்விபட்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்கு கண்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறித்து தெரியும்? நம்மை பொறுத்தவரை கண்கள் தெரிந்தால் போதும், ஆனால் அதை முறையாக பராமரிக்கிறோமா என்றால் இல்லை.
எல்லாவற்றையும் பார்க்க தெரிந்து கொள்ள நாம் முதலில் பயன்படுத்துவது கண்களைத் தான். நார்மலாக ஒரு நிமிடத்திற்கு 16 முதல் 20 முறை வரை கண் இமைகள் மூடி திறக்கும். அதுவே ஒரு புத்தகம் படிக்கும்போதோ அல்லது டிவி, மொபைல் பார்க்கும்போதோ ஒரு நிமிடத்திற்கு ஒன்றிலிருந்து இரண்டு முறைதான் அவை திறந்து மூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உங்களது கண்களை ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு முறை உங்கள் டிவைஸிலிருந்து கண்ணை திசைதிருப்பி 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை 20 நொடிகளுக்கு பாருங்கள். இப்படி தொடர்ந்து செய்வது கண்களை பாதுகாக்கும் குறிப்பாக கண்கள் உலர்ந்து போகாமல் தடுக்கும்.
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 15 நிமிடத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இரே இடத்தில் உட்கார கூடாது. கண்களுக்கு அதிக பணி கொடுக்க கூடாது. அதற்கு போதுமான இந்த இடைவெளி தேவை. நீங்கள் பயன்படுத்தும் அறையில் நல்ல வெளிச்சம் நிறைந்த மின்விளக்குகளை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கண்கள் சிரமமின்றி பார்க்க அல்லது படிக்க வேண்டியவற்றை பார்த்து கொள்ளும்.
உங்கள் டிவைஸின் ஸ்கிரீனை ஒரு கை அளவு தூரத்தில் எப்போதும் வைத்துக் கொள்ளவும். அதே போல் உங்கள் கண்பார்வைக்கு 10 டிகிரி கீழே உங்கள் ஸ்கிரீன் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அதே போல் ஸ்கிரீன் வழியாக படிக்கும் போது எழுத்துக்களை நல்ல பெரிய எழுத்துருக்களில் படிக்கவும்.
குறுகிய வடிவ எழுத்துக்கள் கண்களுக்கு படிக்க சிரமத்தை ஏற்படுத்தும். எனவே ஸ்கிரீனை பெரிது படுத்தி பயன்படுத்தவும். மேலும் நீங்கள் அமர்ந்திருக்கும் வடிவம் சவுகரியமானதாக இருந்தால் மட்டும் கழுத்து, இடுப்பு, கண்களுக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும். அமரும் போதே சரியான இடத்தில் அமருங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்