என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹெட்மையர்"
- கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்தில் ஹெட்மையர் ரன் எடுக்கவில்லை.
- 3-வது மற்றும் 5-வது பந்தை சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார்.
பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சண்டிகரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஜித்தேஷ் சர்மா (24 பந்தில் 29 ரன்), லிவிங்ஸ்டன் (14 பந்தில் 21 ரன்), இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா (16 பந்தில் 31 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆவேஷ் கான், மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால், தனுஷ் கோட்டியன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக விளையாடினார். அதேசமயம் ரபடா அபாரமாக பந்து வீச ராஜஸ்தான் அணியால் அதிரடியாக ரன்கள் அடிக்க முடியவில்லை. ஆகவே, தேவைப்படும் ரன் ரேட் அதிகரித்து கொண்டே சென்றது.
பவர் பிளேயில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்தது. அந்த அணி 9-வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. கோட்டியன் 31 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். ஜெய்ஸ்வால் 28 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. சாம்சன் 14 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். ராஜஸ்தான் அணி 14 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி 6 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டது. 15 மற்றும் 16-வது ஓவரில்களில் முறையே 9 மற்றும் 6 ரன்கள் கிடைத்தது. 17-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் ரியான் பராக் 18 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது.
கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் ஜுரேல் 11 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 17.2 ஓவரில் 115 ரன்கள் எடுத்து நெருக்கடிக்கு உள்ளாகியது.
16 பந்துக்கு 33 ரன்கள் என்ற நிலையில் ஹெட்மையர் உடன் ரோவன் பொவேல் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஹெட்மையர் பவுண்டரிக்கு விரட்டியதுடன், கடைசி பந்தில் சிக்ஸ் விளாசினார். இதனால் 18-வது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது.
கடைசி இரண்டு ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பொவோல் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 9 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி 3 பந்தில் இரண்டு ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ராஜஸ்தான் 19-வது ஓவரில் 10 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்ஷ்தீப் பந்து வீச ஹெட்மையர் எதிர்கொண்டார். முதல் இரண்டு பந்துகளில் ஹெட்மையர் ரன்ஏதும் அடிக்கவில்லை. 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் ஹெட்மையர்.
இதனால் கடைசி 3 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் 2 ரன் அடித்த ஹெட்மையர் 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 19.5 ஓவரில் 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்