என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணாமலை BJP"

    • திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
    • உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையின் இருப்பார்கள்

    திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நிலக்கோட்டை பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்பகுதியில் உள்ள பள்ளபட்டி, அணைப்பட்டி, விறுவீடு பகுதிகளில் நடிகர் கருணாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை ராஜா ஒருபோதும் வாய்ப்பில்லை.

    படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பாஜகவின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு என்றும், எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை" என்று அவர் தெரிவித்தார். 

    • டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • அன்புமணி ராமதாஸ், தமிழசை சவுந்தரராஜன் ஆகியோர் கண்டனம்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், " அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி சந்திப்பு பற்றி தமிழக முதலமைச்சர் விளக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று காட்டமாக பதில் அளித்தார்.

    இதற்கு, பாமக தலைவரும் பாராளுமன்ற எம்பியுமான அன்புமணி ராமதாஸ், பாஜக மூத்த தலைவர் தமிழசை சவுந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான ராமதாஸ்

    அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

    திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 - 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் போலும்.

    ராமதாஸ் அவர்கள் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?

    அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ராமதாஸ் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது.

    அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×