search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல்மி பேட் 2"

    • இந்த டேப்லெட் மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • ரியல்மி பேட் 2 மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பேட் 2 வைபை மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய P1 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் இந்த டேப் அறிமுகமாகி இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி பேட் 2 வைபை மாடலில் 11.5 இன்ச் 2K LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    7.2mm அளவில் மிக மெல்லிய மெட்டல் பாடி மற்றும் குளோயிங் ஸ்பைஸ் டிசைன் கொண்டிருக்கும் ரியல்மி பேட் 2 வைபை மாடல் 8360 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

     


    ரியல்மி பேட் 2 வைபை அம்சங்கள்:

    11.5 இன்ச் 2K 2000x1200 LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர்

    Arm Mali-G57 MC2 GPU

    6 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4

    8MP பிரைமரி கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்

    குவாட் ஸ்பீக்கர்கள்

    வைபை, ப்ளூடூத் 5.3, யு.எஸ்.பி. டைப் சி

    8360 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    ரியல்மி பேட் 2 வைபை மாடல் இமேஜினேஷன் கிரே மற்றும் இன்ஸ்பிரிஷேன் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×