search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டு பிளெசிஸ்"

    • 280 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. அது எட்டுவதற்கு கடினமான ஒன்று.
    • பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது பந்துவீச்சாளர்களின் சமநிலை தவறியது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி வரை இலக்கிற்கு நெருக்கமாக செல்வோம் என்று நினைத்தே விளையாடினோம் என ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெசிஸ் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளனர். டி20 கிரிக்கெட் ஏற்ற மைதானமாக இந்த மைதானம் இருந்தது. கடைசி வரை இலக்கிற்கு நெருக்கமாக செல்வோம் என்று நினைத்தே விளையாடினோம்.

    ஆனால் 280 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. அது எட்டுவதற்கு கடினமான ஒன்று. இருந்தாலும் நாங்கள் நிறைய விசயங்களை இந்த போட்டியில் முயற்சி செய்தோம். அந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவதில் மிக சிரமத்தை சந்தித்தனர். ஏனெனில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது பந்துவீச்சாளர்களின் சமநிலை தவறியது.

    எங்களது பந்துவீச்சாளர்கள் அந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பவர்பிளே ஓவர்களில் நாங்கள் ரன் ரேட்டினை மனதில் வைத்து தான் எந்த இடத்திலும் ரன்களை குறைய விடாமல் விளையாடினோம். ஆனால் சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். இந்த போட்டியில் 30 முதல் 40 ரன்கள் வரை நாங்கள் அதிகமாக வழங்கி விட்டோம். அதுவே தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. இருந்தாலும் எங்கள் பேட்டர்கள் கடைசி வரை நின்று விடாமுயற்சியுடன் வெற்றிக்கு போராடியது மிகவும் மகிழ்ச்சி.

    இவ்வாறு டு பிளெசிஸ் கூறினார்.

    • மும்பைக்கு எதிராக போட்டியில் டாஸ் போடுவதற்காக காயினை சுண்டி விட்டார்கள்.
    • அந்த காயின் கீழே விழுந்த பின்னர் அப்படியே அந்த காயினை திருப்பி எடுத்து கொடுத்து என்னிடம் தோற்று விட்டதாக காட்டினார்கள் என டு பிளெசிஸ் கூறினார்.

    ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஆர்சிபி- ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டி துவங்குவதற்கு முன்னதாக டாஸ் போடும் இடத்திற்கு வந்த டு பிளெசிஸ் கடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது டாஸ் போடும் போது எவ்வாறு தான் ஏமாந்தேன் என்பது குறித்து பேட் கம்மின்ஸ்ஸிடம் கூறுவது போல சில செய்கைகளை வெளிப்படுத்தியிருந்தார். அது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், கடந்த போட்டியின் போது என்ன நடந்தது தெரியுமா? டாஸ் போடுவதற்காக காயினை சுண்டி விட்டார்கள். அப்போது அந்த காயின் கீழே விழுந்த பின்னர் அப்படியே அந்த காயினை திருப்பி எடுத்து கொடுத்து என்னிடம் தோற்று விட்டதாக காட்டினார்கள் என்பது போன்று செய்கையை செய்து காட்டி விளக்கம் கொடுத்தார். இதனை கேட்ட கம்மின்ஸ் சிரித்தவாறு அதனை கவனித்துக் கொண்டிருந்தார்.

    வான்கடே மைதானத்தில் அவர்கள் கடைசியாக விளையாடிய போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா மற்றும் டு பிளெசிஸ் ஆகியோர் டாஸ் போடுவதற்காக மைதானத்திற்கு வந்தனர்.

    அப்போது டாஸ் போடும் நிகழ்வும் நடைபெற்றது. ஆனால் டாஸ் விழுந்த பின்னர் அந்த காயினை எடுத்த நடுவர் ஸ்ரீநாத் மும்பை அணிக்கு ஆதரவாக காயினை திருப்பி காண்பித்து டுபிளிசிஸ் டாசில் தோல்வி அடைந்ததாக ஏமாற்றினார். இதுகுறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அதோடு எப்போதுமே மும்பை அணி வான்கடே மைதானத்தில் விளையாடும் போது அவர்களுக்கே முடிவுகள் சாதகமாக இருப்பதாகவும் ரசிகர்களும் அந்த தவறுகளை சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×