search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைந்த கலோரி"

    • பாப்கார்ன் சிறந்த நொறுக்குத்தீனியாக விளங்குகிறது.
    • உடலில் உள்ள ப்ரீரேடிக்கல்சை அழிக்க உதவுகிறது.

    பாப்கார்ன் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவாகும். சோளத்தை அதிக வெப்பத்திற்கு உட்படுத்தும் போது, அதில் உள்ள தண்ணீர் நீராவியாக விரிவடைந்து, வெடித்து பாப்கார்னாக மாறுகிறது.

    இதில் குறைந்த கலோரிகள், குறைந்த கொழுப்பு. அதிக நார்ச்சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த நொறுக்குத்தீனியாக விளங்குகிறது. ஒரு கப் பாப்கார்னில் 31 கலோரிகள், 1 கிராம் நார்ச்சத்து, 1 கிராம் புரதம். 6 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இது 55 என்ற மிதமான கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளது.

    மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி3, 6, ஈ மற்றும் இரும்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

    பாப்கார்னில் உள்ள பீட்டா கரோட்டின், லூட்டின், ஜியோசாந்தின் போன்றவை கண்களுக்கு நன்மை தரக்கூடியவை. இதில் உள்ள அதிகமான பாலிபெனால்கள் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகளை பெற்றுள் ளது. இது உடலில் உள்ள ப்ரீரேடிக்கல்சை அழிக்க உதவுகிறது.

    சர்க்கரை நோயாளிகள் பாப்கார்னை வெண்ணெய், உப்பு சேர்க்காமல் வெறுமனே சாப்பிடுவது நல்லது. மசாலா, எண்ணெய், கேராமல் போன்றவற்றை பாப்கார்னில் சேர்க்கும்போது இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாகி கெடுதலை ஏற்படுத்தும்.

    • ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
    • அதிகமான அளவு ஐஸ்கிரீம் உட்கொள்ள கூடாது.

    ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சர்க்கரை நோயாளிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவர்கள் ஐஸ்கிரீமை சாப்பிடவே கூடாது என்பதல்ல. தங்கள் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் போது ஐஸ்கிரீமை எப்பொழுதாவது சாப்பிடலாம். ஒரு அரை கப் ஐஸ்கிரீமில் 137 கலோரிகள், 7 கிராம் கொழுப்பு, 16 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் இனிப்பு இருக்கிறது.

    ஐஸ்கிரீமில் அதிகமான அளவு கார்போஹைட்ரேட், சர்க்கரை, கலோரி மற்றும் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதாலும், ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுவதில்லை. இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் மூன்று வாரத்துக்கு ஒருமுறை, அரை கப் ஐஸ்கிரீம் சாப்பிடலாம். அப்போது அவர்கள் கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.

    1) ஐஸ்கிரீம் சாப்பிடும் போது குறைந்த கார்போஹைட்ரேட், கலோரி, சுகர், கொழுப்பு மற்றும் அதிக புரதம் உள்ள ஐஸ்கிரீம்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    2) உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லது. அப்போது ஐஸ்கிரீமில் உள்ள அதிக கார்போஹைட்ரேட் அளவை சமன் செய்ய அன்று உட்கொள்ளக்கூடிய உணவில் கார்போஹைட்ரேட் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    3) ஐஸ்கிரீமின் மேலே டாப்பிங்ஸாக பாதாம், பிஸ்தா போன்றவற்றை உபயோகிக்க வேண்டும். இது ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே ஏற்படும் சுகர் ஸ்பைக்ஸை திடுக்க உதவுகிறது.

    4) அதிகமான அளவு ஐஸ்கிரீம் உட்கொள்ள கூடாது.

    5) ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் போது, அந்த சூழலில், ஐஸ்கிரீம் உண்ண முயற்சிக்க கூடாது.

    ஐஸ்கிரீமில் உள்ள டிரிப்டோபான் எனும் அமினோஆசிட் "பீல் குட்" ஹார்மோன் என்று அழைக்கப்படும் "செரட்டோனின்" சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இது மன அழுத்தத்தை குறைத்து உற்சாகமாக வைத்திருக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    ×