என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தூக்கமின்மைக்கான அறிகுறிகள்"
- சுமார் 7 மணி நேரம் இரவில் நன்கு தூங்க வேண்டும்.
- ஒருவர் படுத்து 15 நிமிடங்களுக்குள் தூங்க வேண்டும்.
பல விலங்குகள், பறவைகள் நின்றுகொண்டே தூங்கும் வழக்கம் உள்ளவை. ஆனால், மனிதன் உட்கார்ந்து கொண்டே தூங்குவது என்பது இயற்கையான செயல் அல்ல. அதிக உடல் எடை, மிகப்பெரிய தொப்பை, சுவாசக்கோளாறு போன்றவை உள்ளவர்கள், இரவு நேர வேலை செய்பவர்கள், தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே தூங்கி விடுவதுண்டு.
20 வயது நிரம்பிய ஒருவர் சுமார் 7 மணி நேரம் இரவில் நன்கு தூங்க வேண்டும் என்பது ஒரு அறிவியல் கணக்கு. உடலியல் கணக்கும் கூட. ஒருவர் உட்கார்ந்த இடத்தில் எல்லாம் சுமார் 5 நிமிடங்களில் தூங்கி விடுகிறார் என்றால் அவரது உடலில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.
உட்கார்ந்த நிலையில் தூங்கும் போது இடுப்பு, கழுத்து, முதுகு பகுதிகளில் வலி, தசை-மூட்டுகள்- தோள்பட்டை இறுக்கம் போன்ற பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்துவிடும்.
உட்கார்ந்து கொண்டே அசைவற்ற நிலையில் தூங்கும் போது உடலின் எல்லா பாகங்களுக்கும் முறையாக ஒழுங்காக கிடைக்க வேண்டிய ரத்த ஓட்டம் சற்று குறைய நேரிடும். இது எல்லாவற்றையும் விட 'டி.வி.டி' என்று சொல்லக்கூடிய `ஆழ்சிரை ரத்த உறைவு' என்கிற மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
சாய்வு நாற்காலியில் முக்கால்வாசி படுத்தது போன்று தூங்கலாம். கர்ப்பிணி பெண்களுக்கு, தூக்கத்தில் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு, நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலப்பின்னோட்ட நோய் உள்ளவர்களுக்குத் தான் இது உபயோகமாக இருக்கும். சாதாரணமாக இருப்பவர்களுக்கு அல்ல.
உட்கார்ந்து கொண்டே தூங்கும் பழக்கத்தை எப்படி நிறுத்துவது?
1) நீங்கள் உட்கார்ந்திருக்கும் அறையில் உள்ள விளக்குகளை எரிய விடுங்கள்.
2) பக்கத்தில் இருக்கும் யாரிடமாவது எதையாவது பேச ஆரம்பித்துவிடுங்கள்.
3) உடனடி சக்தி கொடுக்கக்கூடிய ஏதாவது ஒரு பானத்தைக் குடித்து, உடலுக்கு சக்தியை உடனே வரவழையுங்கள்.
4) ஒரு பெருமூச்சை இடையில் இடையில் இழுத்து விட்டுக்கொண்டு சில விநாடிகள் அல்லது சில நிமிடங்கள் ஓய்வாக இருங்கள்.
5) கண்களுக்கு வேலை கொடுங்கள்.
6) உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து எழுந்து வீட்டிற்குள்ளோ, அலுவலகத்திற்குள்ளோ ஒரு ரவுண்டு சுற்றி வாருங்கள்.
ஒருவர் படுத்து 15 நிமிடங்களுக்குள் தூங்க வேண்டும். இதுதான் இயற்கையான தூக்க முறை. ஒருவர் ½ மணி நேரத்திற்கு மேலும் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறார் என்றால், அது தூக்கமின்மை நோயின் ஆரம்ப அறிகுறி ஆகும். இது உடல் பிரச்சினையாகவும் இருக்கலாம், மனப்பிரச்சினையாகவும் இருக்கலாம். உங்கள் குடும்ப டாக்டரை சந்தித்து ஆலோசனை மற்றும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். பயப்படத் தேவையில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்