என் மலர்
முகப்பு » slug 397042
நீங்கள் தேடியது "பாடகி எஸ் ஜானகி"
- இதுவரை சுமார் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி 4 தேசிய விருதுகள், 33 மாநில அரசு விருதுகளை வாங்கியுள்ளார்.
- இதுவரை 500 இசைக் கச்சேரிகளில் பாடல்களை பாடியுள்ளார்.
தென் இந்தியாவின் நைட்டிங்கேள் என்று அழைக்கப்படுபவர் பாடகி எஸ்.ஜானகி. "அன்னக்கிளி உன்னை தேடுதே", "மச்சானை பார்த்தீங்களா", "கண்மணியே காதல் என்பது" உள்பட பல பாடல்களை இளையராஜா இசையிலும், எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரகுமான், அனிருத் ஆகியோரின் இசையிலும் பாடி இன்று வரை தனது மெல்லிய குரலால் மனதை மயக்கி வருபவர் எஸ்.ஜானகி.
இதுவரை சுமார் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள அவர் 4 தேசிய விருதுகள், 33 மாநில அரசு விருதுகளை வாங்கியுள்ளார். இதுவரை 500 இசைக் கச்சேரிகளில் பாடல்களை பாடியுள்ளார். இளமையும், மழலையும் நிறைந்த குரலுக்கு சொந்தக்காரரான பாடகி எஸ்.ஜானகி இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவருக்கு பாடகி சித்ரா, சுஜாதா உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
×
X