என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெட்டோரி"

    • நாங்கள் நிச்சயமாக ஒரு ஆக்ரோஷமான விளையாட்டை விரும்புகிறோம்.
    • இதுபோன்று விளையாடும் போது தோல்வி ஏற்படலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

    விசாகப்பட்டினம்:

    தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஐதராபாத் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றது. 2 தோல்வியை சந்தித்தது. பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கும் போக்கை கடைபிடித்து வரும் அந்த அணி முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்கள் குவித்தது. ஆனால் கடந்த 2 போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது.

    இந்த நிலையில் ஐதராபாத் அணி பயிற்சியாளர் வெட்டோரி கூறியதாவது:-

    அதிரடியாக விளையாடும் போக்கை மாற்றுவது பற்றி எந்த உரையாடலும் நடக்கவில்லை. அந்த போக்கை நாங்கள் மாற்ற மாட்டோம். நாங்கள் நிச்சயமாக ஒரு ஆக்ரோஷமான விளையாட்டை விரும்புகிறோம். எங்கள் முதல் 3 பேட்ஸ்மேன்கள் விளையாடுவதை பார்த்தால் அது உங்களுக்கு தெரியும்.

    இதுபோன்று விளையாடும் போது தோல்வி ஏற்படலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்று நான் நம்புகிறேன். 18 ஐ.பி.எல். சீசன்களின் போக்கைப் பார்த்தால், தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் தோல்வியடையாத அணிகள் மிகக் குறைவு.

    சீசனின் தொடக்கத்தில் ஐதராபாத் இருக்கும் நிலை ஒரு பின்னடைவு அல்ல. நாங்கள் விளையாடும் ஒவ்வொரு முறையும் மிகச் சிறந்த அணி, நன்கு திட்டமிடப்பட்ட அணிகள் மற்றும் மிகவும் திறமையான வீரர்களை எதிர்கொள்கிறோம். நாங்கள் திரும்பி வந்து வெற்றி பெற முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. நாங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாங்கள் விரும்பும் பாணியில் தொடர்ந்து விளையாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்கள் அணி மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் தொடக்க வீரர்களாக அமைக்கப்பட்டது.
    • ஆர்.சி.பி.க்கு எதிரான ஆட்டத்தில் அன்றைய தினம் அவர்களுடையதாக அமையவில்லை.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் மற்றும் கிளாசன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த 15-ந்தேதி ஆர்சிபி அணிக்கெதிராக 287 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை பதிவு செய்தது.

    நேற்று மீண்டும் ஆர்சிபி அணியை எதிர்கொண்டது. இதில் எப்படியும் 300 ரன்கள் குவிக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களை ஆர்சிபி பந்து வீச்சாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்றும் பரிதாபப்பட்டனர்.

    ஆனால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 206 ரன்கள் குவித்தது. பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. 207 இலக்கை எளிதாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா பவர்பிளேயில் விளாசி விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ஆர்சிபி பந்து வீச்சாளர்கள் அசத்த சன்ரைசர்ஸ் அணியால் 171 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டிராவிஸ் ஹெட் 1 ரன்னிலும், மார்கிராம், 7 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 13 ரன்னிலும், கிளாசன் 7 ரன்னிலும் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்கள் எடுத்து யாஷ் யதாள் பந்தில் ஆட்டமிழந்தார்.

    300 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், 207 இலக்கை எட்ட முடியவில்லையே என ரசிகர்கள் டிரோல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தொடக்க வீரர்களிடம் 14 போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெட்டோரி கூறியதாவது:

    எங்கள் அணி மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் தொடக்க வீரர்களாக அமைக்கப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். இன்றைய நாள் (நேற்று) அவர்களுடையதாக அமையவில்லை. கிரிக்கெட்டில் இதுபோன்ற நாட்கள் அமையும். 14 போட்டிகளிலும் அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. துரதிருஷ்டவசமாக நாங்கள் மிடில் ஆர்டர் வரிசையில் ஆதரவு பெற முடியவில்லை.

    இது கடினமான தோல்விதான். என்றால், எந்த அணியும் எந்த அணியை ஐபிஎல் கிரிக்கெட்டில் தோற்கடிக்க முடியும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். ஐபிஎல் எந்த போட்டியில் எளிதாக போட்டி என்பது கிடையாது.

    இவ்வாறு வெட்டோரி தெரிவித்துள்ளார்.

    ×