search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனே நிறுவனம்"

    • சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.
    • 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம்.

    ஒரு சில சமயங்களில் நமக்கு பிடித்த வேலையை பெறுவதற்காக பிடிக்காத வேலையை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். அத்தகைய சூழல்களில் வெறுப்பாகவும், வேலையை முழு ஈடுபாடு இல்லாமலும் செய்ய நேரிடும். சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.

    ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்பது ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு. அதிலும் முக்கியமாக ஊதிய உயர்வு என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பதால் அது கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். அதிலும் 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம். ஆனால், இங்கு ஒருவர் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார் அன்கேத். கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு தராத நிறுவனத்தில் இருந்து வேலையை ராஜினாமா செய்துள்ளார். வேலையை ராஜினாமா தானே செய்துள்ளார் என்றால் சரி. அதனை கொண்டாடும் விதமாக இசைக்குழுவுடன் இணைந்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால் தற்போது பேசுபொருளாகியுள்ளார்.

    ஊதிய உயர்வு தராமல் இருந்ததால் கடும் அதிருப்தியில் இருந்த அன்கேத், பணியில் இருந்து விலகுவதை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட முடிவெடுத்தார். இதையடுத்து தனது நண்பர்கள் மற்றும் இசைக்குழுவை அழைத்து அன்கேத், நிறுவனத்தின் மேலாளர் அலுவலகம் முடிந்து வெளியில் வந்த போது வாசல் முன்பு மகிழ்ச்சியுடன் மேளம் அடித்து ஆடிப்பாடி நடனம் ஆடி கொண்டாடினார். இதனால் எரிச்சலடைந்த நிறுவனத்தின் மேலாளர், அன்கேத் மற்றும் குழுவினரை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×