search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி காங்கிரஸ் தலைவர்"

    • அரவிந்த் சிங் லவ்லி, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
    • எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்ற கடினமாக உழைப்பேன்.

    டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் முன்னாள் டெல்லி மந்திரி அரவிந்த் சிங் லவ்லி. இவர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

    இதற்கிடையே, கடந்த 28ம் தேதி அன்று தனது கட்சியின் மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, டெல்லி மாநில காங்கிரசின் இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.

    தேவேந்தர் நியமனம் செய்யப்பட்டதற்கும், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏக்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகினர்.

    இந்நிலையில், டெல்லி காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தொடர் அரசியல் சலசலப்புகளுக்கு மத்தியில், டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவராக தேவேந்தர் யாதவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

    பின்னர் தேவந்தர் சிங் பேசியதாவது:-

    இது எனக்கு ஒரு முக்கியமான நாள். ஏனென்றால் எனக்கு ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என் மீது நம்பிக்கை வைத்ததற்காக தலைமைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    மேலும், எனது எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்ற கடினமாக உழைப்பேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

    இது கடினமான காலங்கள், ஆனால் நாங்கள் பாடுபடுவோம். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்திய கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி விலகினார்
    • காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்

    புதுடெல்லி:

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை கடந்த மாதம் 28 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து, நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவது இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன். கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பேன். கட்சியின் கொள்கைகளை நிலைநாட்டவே இந்த முடிவை எடுத்துள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை காரணம் இல்லை என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய அர்விந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்துள்ளார்.

    மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜக மூத்த தலைவர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்

    அப்போது காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்

    இவர் பாஜகவில் இணைவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மீண்டும் 2018 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி விலகினார்.
    • பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். டெல்லி காங்கிரஸ் உள் விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியா தலையிடுவதாக கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    இதற்கிடையே, அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க. பக்கம் தாவலாம் என தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவது இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன். கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பேன். கட்சியின் கொள்கைகளை நிலைநாட்டவே இந்த முடிவை எடுத்துள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை காரணம் இல்லை என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா.
    • டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4ல் ஆம் ஆத்மி, 3ல் காங்கிரஸ் போட்டி.

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் மேலிடம் தங்களின் கருத்துக்களை கேட்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4ல் ஆம் ஆத்மி, 3ல் காங்கிரஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    ×