என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பின்னணி பாடகி"
- சமீபத்தில் மத்திய அரசு உஷா உதுப்புக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.
- உஷா உதுப்பின் 2-வது கணவர் ஆவார்.
இந்திய திரை உலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் உஷா உதுப். 1960-ம் ஆண்டு தொடங்கிய இவரது இசைப்பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் மத்திய அரசு உஷா உதுப்புக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. உஷா உதுப், ஜானி சாக்கோ என்பவரை திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
உதுப் கணவரான ஜானி (வயது 78) நேற்று கொல்கத்தாவில் உள்ள வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் உடலுக்கு அசவுகரியமாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக அறிவித்தனர்.அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. ஜானி சாக்கோ, உஷா உதுப்பின் 2-வது கணவர் ஆவார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது.
- ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையும் இந்திய சினிமாவின் மூத்த பாடகியான 90 வயதாகும் ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல கிளாசிக் படலக்ளை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது. சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற கொஞ்சநேரம் கொஞ்சநேரம் பாடல், ஹே ராம் படத்தில் இடம்பெற்ற நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என ஆஷா போஸ்லேவின் கிரக்கும் குரலுக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் தற்போது ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நேற்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை மும்பையில் வைத்து நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஜாக்கி செராப் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம், விழா மேடையில் வைத்து ஆஷா போஸ்லேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது கால்களை முத்தமிட்டு தண்ணீரால் கழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்ணீரால் ஆஷாவின் கால்களைக் கழுவித் துடைத்த சோனு நிகாம் பின் எழுந்து நின்று ஆஷாவுக்கு தலைவணங்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சோனு நிகாம் தமிழில் அஜித்தின் கிரீடம் படத்தில் இடம்பெற்ற விழியினில் உன் விழியினில், ஆர்யாவின் மதராசபட்டினம் படத்தில் இடம்பெற்ற ஆருயிரே, கார்த்தியின் சகுனி படத்தில் இடம்பெற்ற மனசெல்லாம் மழையே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடுயுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 25 மொழிகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
- விமானத்தில் இருந்து வெளியேறும்போது தன்னால் எதையும் கேட்க முடியாததை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் அல்கா யாக்னிக். 58 வயதான இவர் பாலிவட் சினிமா உலகின் முன்னணி பாடகியாக திகழ்ந்தவர். 90-களில் இவர் பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
25 மொழிகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். பிலிம்ஃபேர் விருது, சிறந்த பின்னணி பாடகிக்கான விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.
இந்த நிலையில் அல்கா யாக்னிக் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தற்போது அரிய வகை நோய் காரணமாக கேட்கும் திறனை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அல்கா யாக்னிக் வெளியிட்டுள்ள பதிவில், "சில வாரங்களுக்கு முன் விமானத்தில் இருந்து வெளியேறும்போது திடீரென என்னால் எதையும் கேட்க முடியாததை உணர்ந்தேன். இதனால் பொது நிகழ்ச்சியல் கலந்து கொள்ளாமல் இருந்தேன். இது தொடர்பாக கேட்க ஆரம்பித்தனர். சில நாட்கள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள், பின்தொடர்பவர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் இதை வெளிப்படுத்துகிறேன்.
இது ஒரு வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட ஒரு அரிய செவித்திறன் இழப்பு என கண்டறியப்பட்டுள்ளது. இந்த திடீர், பெரும் பின்னடைவு என்னை முற்றிலும் அறியாமல் பிடித்துவிட்டது. இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஆதரவு தெரிவிக்கவும், இதில் இருந்து மீண்டு வர தனக்கான பிரார்த்தனை செய்யவும் கேட்டுக் கொள்கிறேன்.
- பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் மூலம் உமா ரமணன் பாடகியாக அறிமுகமானார்.
- உமா ரமணன் மறைவால் இசை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் (69), சென்னை அடையாறில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவால் இருந்தார்.
இந்நிலையில், உமா ரமணன் நேற்று காலமானார். அவரது மறைவால் இசை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற 'பூங்கதவே தாழ் திறவாய்' என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். தீபன் சக்ரவர்த்தி உடன் இணைந்து அந்தப் பாடலை அவர் பாடி இருந்தார்.
கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தொடு, திருப்பாச்சி உள்பட பல்வேறு படங்களில் பின்னணி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்