என் மலர்
நீங்கள் தேடியது "திருவிதாங்கூர் தேவசம்போர்டு"
- இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு திட்டங்களை திருவிதாங்கூர் தேவசம்போடு அமல்படுத்தி வருகிறது. அதன்படி சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கக்கூடிய விபத்தில் சிக்கினால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்து ஐயப்ப பக்தர்கள் பலியானாலும், ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் விபத்துகளில மரணமடைபவர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் நிபந்தனை விதித்திருந்தது.
இந்த நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் எந்த பகுதியில் சாலை விபத்தில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் மரணமடைந்தாலும், அவர்களது குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.
சபரிமலை வரும் வழியில் மாரடைப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி சேகரிக்க திட்டம் இருக்கிறது. மேலும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முன்பெல்லாம் தூரத்தில் உள்ள கோவில்களில் பூஜை செய்வதற்கு தெரிந்தவர்கள் யாராவது சென்று பதிவு செய்ய வேண்டும்.
- ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதால் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.
திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக இருக்கின்றன. திருவிதாங்கூர் தேவ சம்போர்டு கட்டுப்பாட்டில் சபரிமலை அய்யப்பன் கோவில் மட்டுமின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் பலவற்றில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூஜைகள் முன்கூட்டியே திட்டமிடப்ப டுகிறது. அந்த கோவில்களில் நடக்கும் பூஜைகளை மக்கள் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். சபரி மலையில் நடத்தப்படும் படிபூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடு களுக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பதிவு முடிந்துவிட்டது.
இந்நிலையில் திரு விதாங்கூர் தேவசம்போர்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள 1,250 கோவில்களில் துலாபாரம், திருமஞ்சனம் உள்ளிட்ட பூஜைகள் செய்ய பக்தர்கள் வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்திருக்கிறது. இதனை சைபர் தடயவியல் நிபுணர் வினோத் பட்டாத்திரிபட் முன்னின்று நடத்துகிறார்.
மேலும் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார். இதனை செயல்படுத்த 150பேர் அடங்கிய அமலாக்க குழுவை திருவிதாங்கூர் தேவ சம்போர்டு அமைத்திருக்கிறது.
முன்பெல்லாம் தூரத்தில் உள்ள கோவில்களில் பூஜை செய்வதற்கு தெரிந்தவர்கள் யாராவது சென்று பதிவு செய்ய வேண்டும். ஆனால் தற்போது இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதால் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.
பக்தர்கள் முன்பதிவு செய்ய வசதியாக ஒவ்வொரு கோவிலின் வலை பக்கமும் மலையாள நாட்காட்டியுடன் இணைக்கப்படும். மலையாள மாதத்தின் நட்சத்திரத்தை பக்தர்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம், ஆங்கிலநாள்காட்டியில் தொடர்புடைய தேதியை அவர்கள் கண்டறிய முடியும்.
- சில நாட்களுக்கு முன்பு அரளி பூக்களை சாப்பிட்ட கால்நடைகள் இறந்தன.
- அரளிப்பூவின் இதழ்களை சாப்பிட்ட சூர்யா சுரேந்திரன் என்பவர் இறப்பு.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில், பத்ம நாபபுரம் பத்மநாத சுவாமி கோவில் உள்ளிட்ட ஏராள மான பிரசித்தி பெற்ற கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஆண்டு தோறும் வருகின்றனர்.
கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட 1,200-க்கும் மேற்பட்ட கோவில்களை திருவிதாங்கூர் தேவ சம்போர்டு நிர்வகித்து வரு கிறது. அவற்றின் வழி காட்டுதலின் படியே அந்த கோவில்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மல்லி, செம்பருத்தி, துளசி உள்ளிட்ட 5 மலர்களை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
கேரள மாநிலத்தில கடந்த சில நாட்களுக்கு முன்பு அரளி பூக்களை சாப்பிட்ட கால்நடைகள் இறந்தன. மேலும் அரளிப்பூவின் இதழ்களை சாப்பிட்ட சூர்யா சுரேந்திரன் என்பவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்த சம்பவங்கள் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்தே திரு விதாங்கூர் தேவசம்போர்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 வித மலர்களை மட்டும் பயன்படுத்த அறிவுரை வழங்கி ஆணை பிறப்பித்திருக்கிறது. இறந்த நபரின் உடல் பரிசோதனையில் அவரது மரணத்துக்கு அரளியின் நச்சுத்தன்மை தான் காரணம் என்பது உறுதி செய்யப்ட்டால் இந்த பூக்களின் பயன்பாடு முற்றிலுமாக நீக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கோவில்களில் பயன்படுத்தப்படும் 5 வகை மலர் செடிகளை நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது தவிர தென்னை, பாக்கு மரங்களும் நடவு செய்யப்பட உள்ளது என்றார்.