என் மலர்
நீங்கள் தேடியது "மைசூரு"
- யானையை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- தொரப்பள்ளி பஜாரில் உலா வந்த காட்டு யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி, முதுமலை புலிகள் காப்பகம் இணையும் பகுதியில், மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி பஜார் அமைந்து உள்ளது.
இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். பொதுவாக இந்த சாலையில் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
இதன்காரணமாக ஊட்டிக்கு தாமதமாக வரும் சுற்றுலா பயணிகள் தொரப்பள்ளி பஜாரில் வாகனங்களை நிறுத்தி மறுநாள் காலை 6 மணி வரை காத்திருந்து பின்னர் புறப்பட்டு செல்வார்கள். மேலும் கனரக வாகன டிரைவர்கள் தொரப்பள்ளியில் வண்டியை நிறுத்திவிட்டு வாகனத்தில் படுத்து தூங்குவது வழக்கம்.
இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை நேற்று இரவு தொரப்பள்ளி பஜாருக்கு வந்தது. பின்னர் அந்த யானை அங்கு நின்றிருந்த வாகனங்களில், சாப்பிட எதாவது உள்ளதா என தேடிப்பார்த்தது.
இதற்கிடையே தொரப்பள்ளி பஜாரில் யானையை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொரப்பள்ளி பஜாரில் உலா வந்த காட்டு யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர்.
- ரேவண்ணாவின் உதவியாளருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இருந்து மீட்பு.
- புகாரில் முதல் குற்றவாளியாக ரேவண்ணா சேர்க்கப்பட்டுள்ளார்.
ரேவண்ணா வழக்கில், மைசூருவில் காணாமல் போன பெண்ணை காலேனஹல்லி கிராமத்தில் ரேவண்ணாவின் உதவியாளருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இருந்து சிறப்பு புலனாய்வு குழு மீட்டுள்ளனர்.
கடந்த 29ம் தேதியில் இருந்து தனது தாயை காணவில்லை என்று மைசூரை சேர்ந்த நபர் புகார் அளித்திருந்தார்
புகாரில் முதல் குற்றவாளியாக ரேவண்ணா சேர்க்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட பெண்ணிடம் பெறப்போகும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் காணாமல் போனாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது தெரியவரும்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தாயை காணவில்லை என மகன் புகார் அளித்திருந்த நிலையில், புகார் தொடர்பாக ரேவண்ணா முன்ஜாமின் கோரியிருந்தார்.
இந்நிலையில், ரேவண்ணாவின் முன்ஜாமின் மனுவை பெங்களூரு மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றம் நிராகரித்தது.
ஏற்கனவே 2 நோட்டீஸ்களுக்கு பதிலளிக்காத நிலையில் ரேவண்ணாவுக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது என்ற எஸ்ஐடி வாதத்தை ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் நோட்டஈஸ் வழங்க எஸ்ஐடி முடிவு செய்துள்ள நிலையில், அந்த நோட்டீஸ்க்கும் பதில் அளிக்கவில்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கடத்தல் வழக்கில் முன்ஜாமின் மனு நிராகரித்த நிலையில், ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
- அமெரிக்காவில் வசிக்கும் தனது சகோதரர் பரத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சேத்தன் போன் செய்தார்.
- சேத்தன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் வேலை செய்துவந்தார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (திங்கள்கிழமை) காலை மைசூருவில் விஸ்வேஸ்வரய்யா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
போலீசாரின் கூற்றுப்படி, இறந்தவர்கள் சேத்தன் (45), அவரது மனைவி ரூபாலி (43), அவர்களது 15 வயது மகன் மற்றும் சேதனின் தாயார் பிரியம்வதா (62) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சேத்தன் முதலில் மூவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.
சேத்தனின் தாயார் பிரியம்வதா குடியிருப்பின் ஒரு வீட்டில் இறந்து கிடந்தனர். அதில் அவர் தனியாக வசித்து வந்தார். மற்ற மூவரும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் வசித்து வந்த மற்றொரு வீட்டில் இறந்து கிடந்தனர்.
அமெரிக்காவில் வசிக்கும் தனது சகோதரர் பரத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சேத்தன் போன் செய்து, தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்யபோவதாக கூறியுள்ளார். பரத் உடனடியாக ரூபாலியின் பெற்றோரை அழைத்து சேத்தனின் வீட்க்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார்.
ஆனால் ரூபாலியின் பெற்றோர் அங்கு சென்றபோது ஏற்கனவே அவர்கள் உயிரிழந்து கிடந்தனர். காலை 6 மணி அளவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வித்யாரண்யபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சேத்தன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் வேலை செய்துவந்ததாகவும் நிதி நெருக்கடி காரணமாக அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கடித்தத்தில் சேதன் எழுதியதாவது, எனது மரணத்திற்காக எனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை காவல்துறை துன்புறுத்தக்கூடாது. இதற்கு நானே பொறுப்பு.