என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பி.டி.எஸ்."
- வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
- அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு வெளியாகும்.
சென்னை:
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
வழக்கமாக, நீட் தோ்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாள்களில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசுகளின் கலந் தாய்வுக்கு விண்ணப்பிப்பது தொடங்கிவிடும். இந்த ஆண்டு நீட் தோ்வு முடிவுகள் கடந்த ஜூன் 4-ந் தேதி வெளியானது.
நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, அடுத்தடுத்த பதிவெண்களைக் கொண்ட 6 போ் முழு மதிப்பெண் பெற்றது போன்றவை நாடுமுழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடா்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றதால், நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
நீட் தோ்வு தொடா்பான வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதனால், அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மாநில அரசு நடத்தும் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாகும்.
- நாடு முழுவதும் 557 நகரங்களில் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர்
- தமிழகத்தில் சுமார் 1 ½ லட்சம் மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெற்றது.
அயல்நாடுகள் உள்ளிட்ட நாடு முழுவதும் 557 நகரங்களில் 24 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் சுமார் 1 ½ லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். சென்னையில் 36 மையங்களில் 24,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
- தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
- தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டது.
சென்னை:
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.
2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் 557 நகரங்களில் இன்று நடந்தது. நாடு முழுவதும் 24 லட்சம் மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
சென்னையில் 36 மையங்களில் 24 ஆயிரத்து 58 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை மிகவும் ஆர்வமுடன் எழுதினார்கள்.
தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. இன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. ஜூன் மாதம் 14-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
மாணவ-மாணவிகளுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இடம்பெற்றுள்ள நடைமுறைகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினார்கள்.
மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக வருகை தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
அவ்வாறு 1.30 மணிக்குள் வந்த மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
அதன்பிறகு வருகை தந்த மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஹால் டிக்கெட் மற்றும் அடையாள சான்று இல்லாத மாணவர்களும் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் காகிதம், துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலெக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேண்ட், கைப்பை, பிரேஸ்லெட், செல்போன், மைக்ரோபோன், புளூடூத், இயர்போன், பெல்ட், பர்சுகள், கைக்கடிகாரம், நகைகள், உணவு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஷூ அணிந்து வந்தவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. எளிதில் தெரியும் படியான தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டது.
மேலும் முறைகேடுகளை தடுக்க தேர்வு அறையில், தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்பட்டனர். முறைகேடுகளில் ஈடுபட்டால் 3 ஆண்டுகளுக்கு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்