என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜல் ஜீவன் மிஷன்"
- மோடி, ஒடிசாவில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
- முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் நிகழ்வுக்கு தற்போதே அழைப்பு விடுக்கிறேன்.
பெர்காம்பூர்:
ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலும் (21 தொகுதி), சட்டசபை தேர்தலும் (147 இடங்கள்) இரண்டு கட்டங்களாக வருகிற 13 மற்றும் ஜூன் 1-ந்தேதி நடக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசாவில் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். பெர்காமில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
ஒடிசாவின் கடலோர பொருளாதாரத்தில் எங்கள் கவனம் உள்ளது. முதல் முறையாக மீன்வளத் துறை அமைச்சகத்தை உருவாக்கினோம். படகுகள் தயாரிக்க மானியம் வழங்கினோம். கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்கினோம். மீனவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கிேனாம்.
ஒடிசாவில் இரண்டு மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒன்று நாட்டில் சக்தி வாய்ந்த அரசு அமைவதாகும். மற்றொன்று ஒடிசாவில் பா.ஜனதா ஆட்சி அமைவதற்கான மாற்றம்.
ஜூன் 4-ந்தேதியுடன் ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாகி விடும். இங்கு முதல் முறையாக இரட்டை என்ஜின் அரசாங்கம் விரைவில் அமைய உள்ளது. இது உங்களின் உற்சாகத்தில் இருந்து தெரிகிறது.
பிஜு ஜனதா தளம் அரசு காலாவதி யாகும் நாளில் பா.ஜனதாவின் முதல்-மந்திரி யார்? என்பது அறிவிக்கப்படும்.புவனேஸ்வரில் ஜூன் 10-ந்தேதி அவர் முதல்-மந்திரியாக பதவிஏற்கும் நிகழ்வுக்கு தற்போதே உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
ஒடிசாவை பல ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. இங்கு தண்ணீர், விவசாயம், நீண்ட கடற்பரப்பு, கனிம தாதுக்கள், வரலாறு, பாரம்பரியம் என அனைத்தும் உள்ளது. இருப்பினும் ஒடிசா மக்கள் ஏழைகளாக இருப்பது ஏன்?
காங்கிரசும், பிஜு ஜனதா தளமும் கொள்ளையடித்தது தான் மக்களின் இந்த நிலைக்கு காரணம். பிஜு ஜனதா தளம் கட்சியில் சிறிய தலைவர்களும் பெரிய பங்களாக்களுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.
பிஜு ஜனதா தளம் அரசு ஆயுஷ்மான் பாரத் யோ ஜனா திட்டத்தை (மத்திய அரசின் பொது சுகாதார காப்பீடு திட்டம்) செயல்படுத் தாததால் ஒடிசா மாநிலம் பலன் அடையவில்லை.
'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் ஒடிசாவுக்கு மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி வழங்கியது. ஆனால் பிஜு ஜனதா தள அரசு பணத்தை சரியாக செலவழிக்கவில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்