என் மலர்
நீங்கள் தேடியது "ஆள்கடத்தல் வழக்கு"
- யோகேஷ் என்பவருடன் வரும் மே மாதம் திருணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
- ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தம்பி கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரப் பிரதேசம் பதோஹி மாவட்டத்தில் உள்ள கொய்ராவ்னா பகுதியை சேர்ந்தவர் கீதா தேவி. இவரது 22 வயது மகளுக்கு யோகேஷ் என்பவருடன் வரும் மே மாதம் திருணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது மகளையும், வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளையும் காணவில்லை என கீதா தேவி இன்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
யோகேஷின் இளைய சகோதரன் ராஜா தனது மகளை கடத்திச் சென்றதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பிரஜ்வால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேரனும், ஹசன் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வால் மீது எழுந்துள்ள செக்ஸ் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.
பிரஜ்வால் 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.
மேலும் அவர் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 ஆயிரம் வீடியோ தொகுப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரஜ்வால் மட்டுமின்றி அவரது தந்தை ரேவண்ணா மீதும் பாலியல் புகார்கள் எழுந்தன. தந்தையும், மகனும் பல பெண்களின் கற்பை சூறையாடி இருப்பதாக கர்நாடகா மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் பிரஜ்வால் வெளி நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.
அவரை கைது செய்ய சர்வதேச போலீஸ் மூலம் புளுகார்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய கர்நாடகா சிறப்பு போலீஸ் படை வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே கற்பழிப்பு புகாரில் சிக்கிய தேவேகவுடா மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான ரேவண்ணா கைது செய்யப்பட்டார். பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு இன்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் பெங்களூர் விக்டோரியா சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரஜ்வால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய பட்டியலை கர்நாடகா போலீசார் தயாரித்து உள்ளனர். அந்த பெண்களிடம் தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி யும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரஜ்வால் செய்திருப்பதை நான் நியாயப்படுத்தவில்லை. தவறு செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். ஆனால் ரேவண்ணா மீதும், பிரஜ்வால் மீதும் திட்டமிட்டு சதி செய்து வீடியோக்களை பரவச் செய்துள்ளனர்.
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இந்த சதி திட்டத்தை மிகவும் சமயோசிதமாக அரங்கேற்றி உள்ளார். பிரஜ்வால் தொடர்பான தகவல்களை திரட்டி அவர் ஆபாச காட்சிகள் கொண்டதாக தயாரித்துள்ளார். சுமார் 25 ஆயிரம் பென்டிரைவ்கள் தயாரித்து அவை அனைத்தையும் ஹசன் பாராளுமன்ற தொகுதி முழுக்க வினி யோகம் செய்துள்ளார்.
பிரஜ்வாலை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமின்றி மோடியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று சதித்திட்டத்துடன் இது அரங்கேற்றப்பட்டுள்ளது. 25 ஆயிரம் பென்டிரைவ்களை மாநில போலீசார்தான் வினியோகம் செய்து இருக்கின்றனர்.
இவை அனைத்துக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையையும் கர்நாடகா அரசு எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.