search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி முதல்வர் அலுவலகம்"

    • முதலமைச்சர் இல்லத்தில் டெல்லி முதல்வர் அதிஷி குடியேறி 2 நாட்களே ஆன நிலையில் சீல்.
    • முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது இதுவே முதல் முறை.

    டெல்லி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் அதிஷியை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, அவரது உடமைகள் வெளியே வீசப்பட்டதாகவும் ஆம் ஆத்மி பரபரப்பாக புகார் தெரிவித்துள்ளது.

    முதலமைச்சர் இல்லத்தில் டெல்லி முதல்வர் அதிஷி குடியேறி 2 நாட்களே ஆன நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

    துணை நிலை ஆளுநரின் உத்தரவின் பேரில் தனது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக முதலலமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும் பாஜக அழுத்தத்திற்கு பணிந்து டெல்லி துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

    முதலமைச்சராக உள்ள ஒருவர் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது இதுவே முதல் முறை என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பசுமையான மற்றும் குப்பைகள் நிறைந்த புது டெல்லிக்கு உங்களை வரவேற்கிறேன்.
    • இங்கே எங்களின் டென்மார்க் தூதரகம் உள்ளது, அங்கே கிரேக்க தூதரகம் உள்ளது.

    இந்தியாவுக்கான டென்மார்க்கின் தூதரக அதிகாரி ஃப்ரெடி ஸ்வேன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், 'பசுமையான மற்றும் குப்பைகள் நிறைந்த புது டெல்லிக்கு உங்களை வரவேற்கிறேன்'என்று தூதரக கட்டிடத்திற்கு வெளியே உள்ள குப்பைக் கிடங்கை அவர் காட்டுகிறார்.

    இங்கே எங்களின் டென்மார்க் தூதரகம் உள்ளது, அங்கே கிரேக்க தூதரகம் உள்ளது. இது ஒரு சர்வீஸ் ரோடாக இருக்க வேண்டும், ஆனால் அது குப்பைகளால் நிரம்பியுள்ளது. இது குறித்து யாராவது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

    தூதரக கட்டிடத்திற்கு வெளியே குப்பைக் கிடங்கு உள்ளதை காட்டிய அவர் யாராவது இதைக் கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோவில், டெல்லி முதல்வர் அலுவலகம் மற்றும் டெல்லி கவர்னர் ஆகியோரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்குகளை அவர் டேக் செய்துள்ளார்.

    ×