என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.எஸ்.கே."

    • தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நேற்று இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொளவதை ஒட்டி தக் லைஃப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. அதில், கமல்ஹாசன், எம்.எஸ்.தோனி ஒருபக்கமும் சிம்பு, ருதுராஜ் மறுபக்கமும் இடம்பெற்றுள்ளனர்.

    • சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி இரண்டாவது இடத்தில் உள்ளது.
    • இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

    சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம் என்றால் மிகையாகாது. இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருப்பதற்கும் அவர்தான் காரணம். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது.

    இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி, ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். வரும் ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையில் சென்னை அணி களமிறங்கவுள்ளது.

    எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் டைட்டன்சை நாளை மீண்டும் சந்திக்கிறது சி.எஸ்.கே.
    • குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா?

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதா னத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி ( மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதரா பாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது போட்டியில் குஜராத் டைட்டன்சை நாளை (10-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார். இதனால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும்.

    கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்.அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 541 ரன் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.

    மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அதிரடியாக ஆடுவது அவசியமாகும். ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்.

    பந்து வீச்சில் துருப்பு சீட்டான இலங்கையை சேர்ந்த பதிரனா எஞ்சிய போட்டிகளில் ஆட முடியா மல் போனது மிகப்பெரிய பாதிப்பே. அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோல் 14 விக்கெட் வீழ்த்திய முஸ்டாபிசுர் ரகுமான் சர்வதேச போட்டிக்காக வங்காள நாடு திரும்பி யுள்ளார். தீபக் சாஹரும் காயத்தில் உள்ளார். இதனால் பந்துவீச்சில் பலவீனமாகவே இருக்கிறது. இதை பேட்மேன் கள்தான் சரி செய்ய வேண்டும்.

    துஷர் தேஷ்பாண்டே (12 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் அவர்களது இடத்தை நிரப்புவார்கள். சான்ட்னர் கடந்த போட்டியில் ரன் கொடுக்காமல் நேர்த்தியாக வீசினார்.

    சுப்மன்கில் தலைமையி லான ருதுராஜ் டைட்டன்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    குஜராத் அணியில உள்ள தமிழக வீரர்களான சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர் ஆகியோர் சென்னைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த கடுமையாக போராடுவார்கள்.

    • சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.
    • ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.

    இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:

    மார்ச் 23: சி.எஸ்.கே. Vs மும்பை இந்தியன்ஸ்

    மார்ச் 28: சி.எஸ்.கே. Vs பெங்களூரு

    ஏப்ரல் 05: சி.எஸ்.கே. Vs டெல்லி

    ஏப்ரல் 11: சி.எஸ்.கே. Vs கொல்கத்தா

    ஏப்ரல் 25: சி.எஸ்.கே. Vs ஹைதராபாத்

    ஏப்ரல் 30: சி.எஸ்.கே. Vs பஞ்சாப்

    மே 12 : சி.எஸ்.கே. Vs ராஜஸ்தான்

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:

    மார்ச் 31 : மும்பை Vs கொல்கத்தா

    ஏப்ரல் 7 : மும்பை Vs பெங்களூரு

    ஏப்ரல் 17: மும்பை Vs ஐதாராபாத்

    ஏப்ரல் 20: மும்பை Vs சென்னை

    ஏப்ரல் 27: மும்பை Vs லக்னோ

    மே 6       : மும்பை Vs குஜராத்

    மே 15     : மும்பை Vs டெல்லி

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:

    ஏப்ரல் 2   : பெங்களூரு Vs குஜராத்

    ஏப்ரல் 10 : பெங்களூரு Vs டெல்லி

    ஏப்ரல் 18 : பெங்களூரு Vs பஞ்சாப்

    ஏப்ரல் 24 : பெங்களூரு Vs ராஜஸ்தான்

    மே 3        : பெங்களூரு Vs சென்னை

    மே 13      : பெங்களூரு Vs ஐதாராபாத்

    மே 17      : பெங்களூரு Vs கொல்கத்தா

    குவாலிபியர் 1 போட்டி மே 20 ஆம் தேதியும் எலிமினேட்டர் போட்டி மே 21 ஆம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. குவாலிபியர் 2 போட்டி மே 23 ஆம் தேதியும் ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராகுல் திரிபாதியை வாங்கியது.
    • இதற்கு முன்பு ராகுல் திரிபாதி ஐதராபாத் அணிக்காக விளையாடினார்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், சிஎஸ்கே அணி வீரர்களுடன் ராகுல் திரிபாதி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராகுல் திரிபாதியை வாங்கியது. இதற்கு முன்பு அவர் ஐதராபாத் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் எம்.எஸ்.தோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    • வேட்டி சட்டையுடன் எம்.எஸ்.தோனி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் எம்.எஸ்.தோனி இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    இதனிடையே தனது நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட தோனி கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே தோனி வேட்டி சட்டை அணிந்திருந்தார் என்று தெரிய வந்துள்ளது.

    ×