search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரோட்டீன் சப்ளிமெண்ட்"

    • இந்தியாவில் அனைத்து வித நோய்களும் தவறான உணவு பழக்கத்தால் 56.4 சதவீதம் ஏற்பட்டு வருகிறது.
    • எனவே தவறான உணவு பழக்கத்தை மக்கள் கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ICMR எச்சரித்துள்ளது.

    உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சி செய்பவர்கள் புரோட்டீன் சப்ளிமெண்ட் அதிகம் பயன்படுத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

    இவற்றை உட்கொள்வதால் உடலின் செயல்பாடுகளில் பலவித மாற்றங்களும், உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துகொண்டேதான் இருக்கிறது.




    இந்த நிலையில் தான் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR ) இந்திய மக்களுக்கான புதிய உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    புரோட்டீன் சப்ளிமெண்ட்களில் மற்றும் செயற்கை உணவு பொருட்களில் சர்க்கரை, கலோரி அல்லாத இனிப்புகள் மற்றும் செயற்கை சுவைகள் இருக்கலாம்.இதை சாப்பிடுவதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. 

    எனவே உடல் எடையை அதிகரிக்க புரோட்டீன் சப்ளிமெண்ட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.




    முட்டை, பால் பால், மோர் மற்றும் சோயா பீன்ஸ், பட்டாணி மற்றும் அரிசி போன்ற பல்வேறு தாவர அடிப்படையிலான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த புரத பவுடர்கள் சப்ளிமெண்ட்ஸ், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் தசை வளர்ச்சிக்காக அதிகமாக பயன்படுத்துவதால் பலவித எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    புரோட்டீன் பவுடர்களை அதிக அளவில் நீண்ட காலத்திற்கு உட்கொள்வதால் எலும்பு தாது இழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு உருவாகும். ஒவ்வொருவரும் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை அளவு 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.




    நாம் சாப்பிடும் உணவில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றை குறைக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்தல் மிகவும் அவசியமாகும்.பெரும்பாலான கலோரிகள், கொட்டைகள், காய்கறிகள், பழங்கள், பால் போன்ற இயற்கை பொருட்களில் நமது உடலுக்கு கிடைக்க வேண்டும்.

    இந்தியாவில் அனைத்துவித நோய்களும் தவறான உணவு பழக்கத்தால் 56.4 சதவீதம் ஏற்பட்டு வருகிறது. எனவே தவறான உணவு பழக்கத்தை மக்கள் கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ICMR எச்சரித்துள்ளது.




    மேலும், உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மூலம் கரோனரி இதய நோய் (CHD)மற்றும் உயர் இரத்த அழுத்தம் (HTN) ஆகியவற்றின் கணிசமான விகிதத்தைக் குறைப்பதுடன், டைப் 2 நீரிழிவு நோயை 80 சதவீதம் வரை தடுப்பதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

    ×