என் மலர்
நீங்கள் தேடியது "விராட்கோலி"
- வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது A+ பிரிவில் உள்ளனர்.
- கடந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கிய ஷ்ரேயாஸ் இந்த முறை இடம் பிடிப்பார்.
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் 'ஏ' கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சமும், 'பி' பிரிவுக்கு ரூ.30 லட்சமும், 'சி' பிரிவுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.
இந்நிலையில் இந்திய ஆண்கள் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கடைசியாக அறிவித்தபோது, உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற வாரியத்தின் கோரிக்கையை நிறைவேற்றாததற்காக, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷானை நீக்கியது. மேலும் ஐயர் மற்றும் கிஷானை மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்குவதில் வாரியம் எந்த தயக்கமும் காட்டவில்லை .
இந்த முறை அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பிடித்தாலும் அதே அளவில் எதிர்பார்க்கலாம். ஷ்ரேயாஸ் ஒப்பந்தப் பட்டியலில் இடம் பிடித்தாலும் இஷான் கிஷான் இடம் பெறுவது உறுதிப்படுத்த முடியாது நிலையில் உள்ளது.
இந்நிலையில் வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது A+ பிரிவில் உள்ளனர். இது அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த மற்றும் பொதுவான வகையாகும்.
இப்போது கோலி, ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்களை A வகைக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பட்டியலில் இளம் வீரர்களான நிதிஷ் ரெட்டி மற்றும் அபிஷேக் சர்மா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்திய வீரர்கள் விளையாடினால் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடர் மிகவும் பிரபலமடைந்துவிடும்.
- ஒரு அணிக்கு இரண்டு இந்திய வீரர்கள் விளையாடினாலே இந்த தொடர் மிகவும் பிரபலமாகிவிடும்.
கேப்டவுன்:
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3-வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 8-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் இந்தியாவின் விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் கலந்து கொள்வதை பார்க்க விரும்புவதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
எந்த இந்திய வீரர் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் எனக் கூறுவதில் எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. பேட்ஸ்மேன் என எடுத்துக் கொண்டால், விராட் கோலி தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில், 100 சதவிகிதம் பும்ரா விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.
இந்திய வீரர்கள் பலரும் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடத் தொடங்கினால், இந்த தொடர் மிகவும் பிரபலமடைந்துவிடும். ஒரு அணிக்கு இரண்டு இந்திய வீரர்கள் விளையாடினாலே இந்த தொடர் மிகவும் பிரபலமாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.