என் மலர்
நீங்கள் தேடியது "ரோஜா கண்காட்சி"
- ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரோஜா செடிகளில் 40 வகையான பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கி கொண்டிருக்கின்றன.
- கண்காட்சியை முன்னிட்டு காலையிலேயே ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந்தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து நேற்று கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.
ஊட்டியின் மைய பகுதியில் அமைந்துள்ள ஊட்டி ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
விழாவில் ஆ.ராசா எம்.பி., அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியை முன்னிட்டு ரோஜா பூங்கா முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நுழைவு வாயிலில் தோரணங்கள் கட்டப்பட்டு, ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் வடிவமைக்கப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
குறிப்பாக 20 ஆயிரம் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு டால்பின்கள் அலங்காரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆயிரம் ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு சிப்பி, நத்தை, மீன், பென்குயின் உள்பட பல்வேறு வடிவங்களும் உருவாக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதுதவிர வெளிமாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் 10க்கும் மேற்பட்ட குடில்களில் பல வகையான மலர் அலங்காரங்களையும் செய்து வைத்திருந்தனர். ரோஜா இதழ்களை கொண்டு ரங்கோலியும் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரோஜா செடிகளில் 40 வகையான பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கி கொண்டிருக்கின்றன.
கண்காட்சியை முன்னிட்டு காலையிலேயே ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த டால்பின்கள், சிப்பி, நத்தை, மீன், பென்குயின் உள்ளிட்ட வடிவமைப்புகளை பார்வையிட்டு கண்டு ரசித்தனர். அத்துடன் அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர். மேலும் ரோஜா இதழ்களை கொண்டு வரையப்பட்டிருந்த ரங்கோலியையும் பார்த்து ரசித்தனர்.
பூங்காவில் பல வண்ணங்களில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் பார்வையிட்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் அதன் முன்பு செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
- கோடைவிழா நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது.
- ரோஜா பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு யானை, புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகளின் உருவங்களும் வைக்கபட்டிருந்தன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக தினமும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.
குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது.
மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 2 லட்சம் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேல்டு, பல்வேறு அலங்கார வளைவுகள், மலர் அலங்காரங்களும் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதேபோல் ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியது. ரோஜா பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு யானை, புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகளின் உருவங்களும் வைக்கபட்டிருந்தன.
கண்காட்சி தொடங்கியதையொட்டி அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். நேற்று ஊட்டியில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சியை பார்வையிட்டனர்.
அங்கு வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள், மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளையும் கண்டு ரசித்தனர். மலைரெயில், டிஸ்னி வேல்டு ஆகியவற்றையும் பார்வையிட்டு, அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

இதேபோல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த குட்டியுடன் கூடிய யானை, மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைகள், யானை, புலி உள்ளிட்டவற்றை பார்த்ததும் ஆனந்தத்தில் துள்ளி குதித்து, அதன் அருகே சென்று, அதனை தொட்டு பார்த்து ரசித்ததுடன், புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
நேற்று ஒரே நாளில் நீலகிரிக்கு 24, 247 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 14 ஆயிரத்து 80 பேர் பார்வையிட்டுள்ளனர். ஊட்டி ரோஜா பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 6 ஆயிரத்து 209 பேர் பார்வையிட்டுள்ளனர்.
இதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 2,471 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 723 பேரும், தேயிலை பூங்காவுக்கு 675 பேரும், மரவியல் பூங்காவுக்கு 89 பேரும் வருகை தந்துள்ளனர்.
- நீலகிரியில் கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
- இந்தாண்டு ரோஜா பூங்காவிலும் 19 ஆவது ரோஜா கண்காட்சி மே 10 அன்று தொடங்கியது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக தினமும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.
குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு ரோஜா பூங்காவிலும் 19 ஆவது ரோஜா கண்காட்சி மே 10 அன்று தொடங்கியது. 1 லட்சத்திற்கும் மேலான ரோஜா மலர்களை கொண்டு ரோஜா பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு யானை, புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகளின் உருவங்களும் வைக்கபட்டிருந்தன.
இந்த கண்காட்சியை இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். 10 நாட்கள் நடைபெறும் ரோஜா கண்காட்சி இன்றுடன் முடிவந்தது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மே 22 வரை ரோஜா கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
- ஊட்டியில் கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
- சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக தினமும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.
குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் மே 10 அன்று தொடங்கியது.
மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 2 லட்சம் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேல்டு, பல்வேறு அலங்கார வளைவுகள், மலர் அலங்காரங்களும் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த மலர் கண்காட்சியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்தனர்.
இன்றுடன் மலர் கண்காட்சி முடிவடைந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் கண்காட்சியை மேலும் 6 நாட்களுக்கு நீட்டித்து தோட்டக்கலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதனபடி 126வது மலர் கண்காட்சி மே 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.