search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான சேவைகள் ரத்து"

    • ஈரானை தொடர்ந்து லெபனானும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது.
    • இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள தங்கள் ராணுவம் தயாராக உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது

    இஸ்ரேலில் ஒரு இரவு 

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 180 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவியது ஈரான். 1 வருட கால பொறுமைக்கு பின்னர் மேற்கு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஈரான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இஸ்ரேல் வெகுகாலம் நிலைக்காது, மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் மதத்தவைவர் அயத்துல்லா காமினி கையில் ரைபிள் துப்பாக்கியுடன் பொதுவெளியில் தோன்றி பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

     

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் எண்ணெய்க் கிணறுகளையும், அணு சக்தித் தலங்களையும் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. ஈரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டது என்றும் அதற்கான விலையை நிச்சயம் செலுத்தும் என்றும் இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு மிரட்டல் விடுத்திருந்தார்.

    ஈரானில் ஒரு இரவு 

    அந்த வகையில் கடந்த வருடம் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த போர் தீவிரமானதால் தங்களின் மீது அதீ நாளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஈரான் அச்சத்தில் உள்ளது.

    எனவே  நேற்றைய இரவு முழுவதும் ஈரானில் அனைத்து விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டன. நேற்று [ஞாயிற்றுக்கிழமை] இரவு 9 மணியில் இருந்து இன்று [திங்கள் கிழமை] காலை 6 மணி வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்தது.

     

    ஈரானை தொடர்ந்து லெபனானும் பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது. இந்நிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் ஈரானில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

    தயார்

    இதற்கிடையே இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள தங்கள் ராணுவம் தயாராக உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா புலனாய்வுத் தலைமையகம் மீதும், காசா பகுதிகள் மீதும் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் ஹைபா [HAIFA] நகர் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை வீசியுள்ளது. 

    • போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பணிக்கு திரும்ப தொடங்கியிருப்பதால் கேரளாவில் பெரும்பாலான சர்வதேச சேவைகள் நேற்று மாலை தொடங்கப்பட்டன.
    • கொச்சி விமான நிலையத்திலும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுனத்தில் பணிபுரியும் கேபின் ஊழியர்களில் ஒரு பிரிவினர் கடந்த 7-ந்தேதி இரவில் திடீரென போராட்டத்தில் குதித்தனர். நிர்வாகம் தங்களை தவறாக நடத்துவதாக கூறி 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அன்றைய தினம் ஏர் இந்தியாவின் 85 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் வேலைக்கு திரும்புவதாக ஊழியர்கள் கூறினர். ஆனால் அவர்கள் பணிக்கு திரும்பாத காரணத்ததால் நேற்று 75 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து கேரள மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநில விமான நிலையங்களில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. அங்குள்ள திருவனந்தபுரம், கண்ணூர், கரிப்பூர், கொச்சி ஆகிய 4 விமான நிலையங்களில் பல விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பணிக்கு திரும்ப தொடங்கியிருப்பதால் கேரளாவில் பெரும்பாலான சர்வதேச சேவைகள் நேற்று மாலை தொடங்கப்பட்டன. ஆனாலும் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட வேண்டிய மஸ்கட் விமானம் இயக்கப்படவில்லை.

    இதேபோல் ஷார்ஜா விமான சேவையும் பாதிக்கப்பட்டது. கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, ஷார்ஜா, மஸ்கட், ரியாத், ராசல் கைமா, தம்மாம் , தோஹா ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவை ரத்து செய்யப்பட்டன.

    கரிப்பூர் விமான நிலையத்தில் இருந்து துபாய், குவைத், தோஹா, பஹ்ரைன், ராசல்ஹைமா ஆகிய விமான சேவைகள் ரத்தாகின. இதேபோன்று கொச்சி விமான நிலையத்திலும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 4, கண்ணூரில் 8, கரிப்பூரில் 6, கொச்சியில் 4 என 22 விமான சேவைகள் கேரளாவில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களும், அங்கிருந்து கேரளாவுக்கு திரும்பி வருபவர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

    ×