என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிஜ்ஜார் கொலை வழக்கு"

    • நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக 4-வது இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • அமர்தீப் சிங் ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறையின் காவலில் இருந்தார் என்றும் தெரிவித்தனர்.

    ஓட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இக்கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால் அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இவ்விவகாரத்தை இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங் (28) ஆகிய 3 இந்தியர்களை சமீபத்தில் கனடா போலீசார் கைது செய்தனர். இவர்கள் ல்பர்ட்டா என்ற பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர்களுக்கு இந்திய அரசுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக 4-வது இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் பிராம்ப்டன், சர்ரே மற்றும் அபோட்ஸ்போர்ட் பகுதிகளில் வசித்த அமர்தீப் சிங் (வயது 22) என்ற இந்தியர், நிஜ்ஜார் கொலையில் பங்கு வகித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் மீது முதல் நிலை கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அமர்தீப் சிங் ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறையின் காவலில் இருந்தார் என்றும் தெரிவித்தனர்.

    ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் பங்கு வகித்தவர்களை பொறுப்பேற்கச் செய்வதற்கான எங்களது விசாரணையின் தன்மையை இந்த கைது காட்டுகிறது என்று அதிகாரி மன்தீப் முகர் தெரிவித்தார்.

    • கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
    • வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப் படக்கூடிய சூழல் உள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே இவ்விவகாரத்தை மீண்டும் கனடா கிளப்பியுள்ளது.

    நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து இந்திய தூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.


    அதேபோல் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தர விட்டது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடா பரிசீலிக்குமா என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலியிடம் நிரு பர்கள் கேட்டனர்.

    அதற்கு அவர், எல்லாம் மேஜையில் உள்ளது என்று பதிலளித்தார். பொருளாதார தடை தொடர்பாகவும் ஆலோசனை உள்ளது என்ற ரீதியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப் படக்கூடிய சூழல் உள்ளது.


    இந்தநிலையில் கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, நிஜ்ஜார் கொலையில் கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவு படுத்தியுள்ளோம். அதன் விசாரணையில் இந்திய அரசாங்கம் கனடாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறோம் என்றார்.

    இதற்கிடையே கனடாவின் சீக்கிய கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜக்மீத் சிங் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    • இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக கனடா தெரிவித்தது.
    • இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்தது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக கனடா தெரிவித்தது. இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் இந்தியாவில் கனடா அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.

    இதற்கிடையே, நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில், இந்திய தூதரான சஞ்சய் வர்மா கனடா செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    நிஜ்ஜார் கொலை தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகள் உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டதல்ல. கனடா உளவுத்துறை தெரிவித்த தகவலின் படியே அந்தக் குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார். இதை அவரே சமீபத்தில் ஒப்புக்கொண்டார். அவரின் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்தியா, கனடா இடையிலான உறவை அவர் தகர்த்துள்ளார். நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.

    • இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று ஜஸ்டின் சமீபத்தில் தெரிவித்தார்.
    • லிபரல் கட்சி எம்.பிக்களை ஜஸ்டின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இதற்கிடையே இக்கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கனடா தெரிவித்தது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்தது. இதற்கிடையே நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று ஜஸ்டின் சமீபத்தில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக சொந்த கட்சி எம்.பிக்கள் 24 பேர் போர்க் கொடி தூக்கினர். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்தது. மேலும் கருத்துக் கணிப்புகளில் ஆளும் கட்சியின் செல்வாக்கு சரிந்து இருப்பது தெரியவந்தது. அடுத்த தேர்தலில் ஜஸ்டின் தலைமையிலான லிபரல் கட்சி மோசமாக தோற்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜஸ்டின் மீது எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி அடைந்து அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். அந்த கடிதத்தில் பிரதமர் பதவியை ஜஸ்டின் ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் 4-வது முறையாக தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் விலக வருகிற 28-ந்தேதி வரை காலக்கெடுவை அதிருப்தி எம்.பி.க்கள் நிர்ணயித்துள்ளனர். சில லிபரல் எம்.பி.க்கள் கூறும் போது, அடுத்த தேர்தலுக்கு முன் ட்ரூடோவை பதவி விலகக் கோரிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளோம். அவர் வருகிற 28-ந்தேதிக்குள் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது குறிப்பிடப்படாத விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே லிபரல் கட்சி எம்.பிக்களை ஜஸ்டின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டம் 3 மணி நேரம் நடந்தது. அப்போது ஜஸ்டின் பதவி விலக வலியுறுத்தும் கடிதம் வாசிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்த பிறகு ஜஸ்டின் கூறும்போது, லிபரல் கட்சி வலுவாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதாக தெரிவித்தார்.

    • ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும்.
    • ட்ரூடோ அரசின் இந்த அறிவிப்பு கனடா பொருளாதாரத்தை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    ஒட்டாவா:

    வடஅமெரிக்க நாடான கனடா சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்களை நம்பி தான் இந்நாட்டின் பொருளதார வளர்ச்சி உள்ளது. ஆனால் சமீப காலமாக இந்திய வம்சாவளியினர் என்ற போர்வையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    அங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதில் இருந்து இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    அவருக்கு எதிராக எம்.பி.க்களும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என கெடுவும் விதித்துள்ளனர். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கனடாவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கனடாவில் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க போகிறோம். இது தற்காலிகமானது தான் என தெரிவித்துள்ளார்.

    அதன்படி இந்த ஆண்டு 4 லட்சத்து 85 ஆயிரமாக இருக்கும் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டு 3 லட்சத்து 95 ஆயிரமாகவும், 2026-ம் ஆண்டு 3 லட்சத்து 80 ஆயிரமாகவும் குறைக்கப்படும். 2027-ம் ஆண்டு இது 3 லட்சத்து 65 ஆயிரமாக குறையும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

    தொழிலாளர்கள் தேவையை நிவர்த்தி செய்யவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும். இதனை சிலர் விமர்சனம் செய்துள்ளனர். கனடா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாட்டில் உற்பத்தி நிலையானதாக இருக்கிறது. இதனை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஆட்களின் எண்ணிக்கை அவசியம். ஆனால் ட்ரூடோ அரசின் இந்த அறிவிப்பு கனடா பொருளாதாரத்தை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    • அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கனடா குற்றம் சாட்டியது.
    • தற்போது பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

    இதை இந்தியா திட்ட வட்டமாக மறுத்தது. இவ் விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று கனடா தெரிவித்தது. அதன்பின் இந்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கனடா குற்றம் சாட்டியது.

    இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதி செயல் குறித்து இந்தியப் பிரதமர் மோடிக்கும் தெரியும் என்று கனடா ஊடகமான தி குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

    பெயர் தெரிவிக்காத கனடா மூத்த தேசிய பாது காப்பு அதிகாரியை மேற் கோள் காட்டிவெளியிடப் பட்ட அந்த செய்தியில், இந்த சதித்திட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளி விவகார அமைச்சர் ஆகியோரும் இருந்தனர் என்றும் தெரிவித்துள்ளது.


    இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறிய தாவது:-

    நாங்கள் பொதுவாக ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும் கனடா அரசாங்கம் ஆதாரம் இல்லா மல் ஒரு செய்தித்தாளில் கூறப்படும் இது போன்ற கேலிக்குரிய அறிக்கைகளை நிராகரிக்க வேண்டும்.

    இதுபோன்ற அவதூறு பிரச்சாரங்கள் ஏற்கனவே சிதைந்து விட்ட இரு நாட்டு உறவுகளை மேலும் சேதப்படுத்துகின்றன என்றார்.

    • இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
    • சம்பவம் தொடர்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4 இந்தியர்களை கனடா அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்தியா - கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடாவில் வெளியாகும் செய்தித்தாளில் செய்திகள் வெளியாகின.

    இதனை தொடர்ந்து நிஜ்ஜாரின் கொலையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்தது. மேலும் அந்தக் குற்றச்சாட்டுகளை "அபத்தமானது" மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று நிராகரித்தது.

    இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில், கனடாவை சேர்ந்த நாளிதழ் ஒன்று நிஜ்ஜார் கொலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் திட்டமிட்டார் எனவும் இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டது என்றும் செய்தி வெளியிட்டு இருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்றும் பிரதமர் மோடி ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கனடா அரசாங்கம் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4 இந்தியர்களை கனடா அதிகாரிகள் கைது செய்தனர். 

    • 123 பக்கங்களைக் கொண்ட அறிக்கை தாக்கல்.
    • வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

    இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இவ்விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    நிஜ்ஜார் கொலை மற்றும் கனடா தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் தொடர்பாக விசாரிக்கக் கனடா அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்தது. 123 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    இதில் நிஜ்ஜார் கொலையில் வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதைத் தொடர்ந்து சிலர் நாட்டில் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பினர்.

    இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கனடா நாட்டு ஆணையமே உறுதிப்படுத்தி இருக்கிறது.

    ×