search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "24/7 மின்சாரம்"

    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரம் மின்சாரம், இலவச கல்வி , மருத்துவம் வழங்கப்படும்.
    • நகரங்களில் கூட தற்போது மின்வெட்டு உள்ளது.அதை நாங்கள் விரைவில் சரி செய்வோம்.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் டெல்லியில் மே 25- ந் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை யொட்டி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. ஜூன் 2-ந் தேதி அவர் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும்.டெல்லியில் மே 25- ந் தேதி நடைபெற உள்ள தேர்தலை யொட்டி தேர்தல் பிரச்சார பணிகளில் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.




    இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு அவரது எம்எல்ஏக்களை சந்தித்து பேசினார். மேலும் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசித்தார். அப்போது கெஜ்ரிவால் 10 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அதில் அவர் கூறியதாவது :-

    * இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்கப்படும்.

    * டெல்லி மற்றும் பஞ்சாபில், நாங்கள் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். மேலும் நாடு முழுவதும் அவ்வாறு செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

    * 2022 -க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க பிரதமர் மோடி தவறி விட்டார். 2022 -க்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் 24×7 மின்சாரம் வழங்கப்படும் என மோடி உத்தரவாதம் அளித்தார். நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் விடுங்கள். நகரங்களில் கூட தற்போது மின்வெட்டு உள்ளது.அதை நாங்கள் விரைவில் சரி செய்வோம்.




    * 2022 க்குள். சபர்மதிக்கும் மும்பைக்கும் இடையே புல்லட் ரெயில் இயக்கப்படும் என்று மோடி உத்தரவாதம் அளித்தது எதுவும் இதுவரை நடக்க வில்லை.விரைவில் நாங்கள் ஏற்பாடு செய்வோம்.

    * சீனா நமது நாட்டு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் மத்திய அரசு எங்கள் நிலத்திற்குள் யாரும் வரவில்லை, எதுவும் நடக்கவில்லை என்று அது கூறுகிறது. அதை விரைவில் மீட்போம்.




    * நாட்டின் சுகாதாரத் துறையில் மிகுந்த கவனம் செலுத்துவோம். நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் நாடு முன்னேறும். 140 கோடி மக்கள் முன்னேற்றத்திற்கு உதவுவோம்.

    * நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் பள்ளிகளில் 18 கோடி குழந்தைகள் படிக்கிறார்கள்.அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. டெல்லியிலும், பஞ்சாபிலும், மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துள்ளோம், அதை நாடு முழுவதும் செயல்படுத்துவோம் என்றார்.

    ×