search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 ஓவர்"

    • கொல்கத்தா அணி குஜராத்தை தோற்கடித்து 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றில் நுழையவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

    புதுடெல்லி:

    17- வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22- ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர் , வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதுவரை 62 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 8 லீக் போட்டிகள் எஞ்சியுள்ளன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 18 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டம் எஞ்சியுள்ளன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. இதில் மும்பைக்கு ஒரு ஆட்டமும் பஞ்சாப்புக்கு 2 போட்டியும் உள்ளன.

    எஞ்சிய 3 இடங்களுக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (16 புள்ளிகள்), சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் (தலா 14 புள்ளி கள்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (தலா 12 புள்ளி), குஜராத் டைட்டன்ஸ் (10 புள்ளி) ஆகிய 7 அணிகள் உள்ளன.

    அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 63-வது 'லீக்' ஆட்டத்தில் குஜராத் -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

    குஜராத் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். அந்த அணிக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் 6-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா அணி குஜராத்தை தோற்கடித்து 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.


    டெல்லியில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி-லக்னோ அணிகள் மோதுகின்றன.

    12 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லி அணிக்கு இது கடைசி ஆட்டமாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அந்த அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இயலும். மேலும் அந்த அணியின் ரன் ரேட் மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

    லக்னோ அணியும் 12 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால் அந்த அணிக்கு 2 போட்டி கள் இருக்கிறது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க லக்னோவும் வெற்றி கட்டாயத்தில் உள்ளது.

    ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றில் நுழையவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. 4-வது அணி எது என்பதில் சென்னை, பெங்களூரு, லக்னோ அல்லது டெல்லி ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இதில் சென்னை, பெங்களூரு ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளன. டெல்லியும், லக்னோவும் ரன் ரேட்டில் பின் தங்கி இருக்கின்றன.

    ×