என் மலர்
நீங்கள் தேடியது "புதிதாக திருமணமான ஆண்கள்"
- டோபமைன் சிறப்பான அளவில் வெளியிடப்பட்டால் மனநிலை சிறப்பாக இருக்கும்.
- பசலைக்கீரை ஆண்மை மற்றும் கருவுறுதலை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

பூண்டு
பூண்டில் இருக்கும் அல்லிசின் திருமணமான ஒவ்வொரு ஆண்களுக்கும் அவசியமான ஒன்று. ஏனென்றால் இந்த பொருள் தான் ஆண்களின் பிறப்புறுப்பு பகுதிகளுக்கு ரத்த ஓட்டட்தை அதிகரிக்க உதவுகிறது. இதுதான் பாலியல் வாழ்க்கைக்கு சிறப்பாக அமையும்.

சாக்லேட்
சாக்லேட்டி டோபமைன் உள்ளது. உடலில் டோபமைன் சிறப்பான அளவில் வெளியிடப்பட்டால் மனநிலை சிறப்பாக இருக்கும். மற்றும் அவர்கள் தங்களை எப்போதும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். மன அழுத்தமின்றி இருப்பார்கள்.

வாழைப்பழம்
திருமணமான ஆண்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவதை வழக்க மாக்கிக்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான வைட்டமின் பி6, பொட்டாசியம், கால்சியம் போன்றவை கிடைக்கிறது. இது உடலையும் மனதையும் சுறுசுறுப்பாகவும், வலிமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் இது காதல் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. பாலுணர்வை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது.

பசலைக்கீரை
பசலைக்கீரையில் உள்ள ஃபோலிக் அமிலம் ஆண்மை மற்றும் கருவுறுதலை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

கடல்சிப்பிகள்
கடல் சிப்பிகளில் துத்தநாகம் மற்றும் ஜிங்க் உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கக் கூடியது. மேலும் கடல் சிப்பி உணவுகளும் காதல் ஹார்மோன்களை அதிகரிக்கக்கூடியவை.

மாதுளை
பழங்களில் மாதுளைப்பழம் எல்லோருக்கும் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகின்றன. மேலும் மாதுளை கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது.