search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "400 இடம்"

    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு இந்தியாவுடன் சேர்க்கப்படும் என்றார் அசாம் முதல் மந்திரி.

    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் இப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் எனக்கூறி போஸ்டர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பேசியதாவது:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெற்றபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது.

    இந்த முறை பா.ஜ.க. 400 இடங்களைக் கைப்பற்றினால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோவில் கட்டப்படும்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும்.

    காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. அது உண்மையில் நம்முடையது. தற்போது, அங்கு போராட்டம் நடந்துவருகிறது.

    ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இடஒதுக்கீட்டிற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்தார்.

    ×