என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டேல் ஸ்டெய்ன்"
- தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 4 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிகா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்னின் பந்து வீச்சு சாதனையை அன்ரிச் நோர்ஜே முறியடித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அன்ரிச் நோர்ஜே ஒரு விக்கெட்டை எடுத்தபோது அவர் டேல் ஸ்டெய்னின் சாதனையை முறியடித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா வீரரான டேல் ஸ்டெய்ன், டி20 உலக கோப்பை போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை எடுத்து இருந்தார். தற்போது நோர்ஜே 31 விக்கெட்டுகளுடன் அவரை முந்தியுள்ளார்.
இந்த போட்டியில், அன்ரிச் நோர்ஜே 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் தொடரில் இதுவரை அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் அன்ரிச் நோர்ஜே 16 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், டேல் ஸ்டெய்ன் 23 போட்டிகளில் 30 விக்கெட்டுகளும், மோர்னே மோர்கல் 17 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும், ரபாடா 19 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.
4 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிகா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
- 2024 டி20 உலகக் கோப்பையில் வர்ணனையாளராக டேல் ஸ்டெய்ன் இருந்து வருகிறார்.
- ஸ்டெய்னுக்கு அமெரிக்க ஊழியர் ஒருவர் பந்துவீச சொல்லி கொடுத்த ஒரு வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 கடந்த ஜூன் 2-ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், எந்த உலகக் கோப்பையிலும் இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டெய்னுக்கு அமெரிக்க ஊழியர் ஒருவர் பந்துவீச சொல்லி கொடுத்த ஒரு வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
2024 டி20 உலகக் கோப்பையில் வர்ணனையாளராக டேல் ஸ்டெய்ன் இருந்து வருகிறார். ஏதேனும் ஒரு அணியில் வளர்ந்து வரும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சந்தேகம் என்றால் சொல்லி கொடுப்பார். ஆனால், ஸ்டெய்ன் யார் என்றே அடையாளத்தை முழுமையாக தெரியாத அமெரிக்க ஊழியர் ஒருவர், ஜாம்பவான் ஸ்டெய்னுக்கு சில பந்துவீச்சு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதை எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஸ்டெயினும் தனக்கு எதுவும் தெரியாததுபோல், அனைத்தையும் ஆர்வத்துடன் கற்றுகொண்டு தான் முதல்முறை பந்துவீசுவதுபோல் முயற்சி செய்தார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீ படிச்ச ஸ்கூல்ல அவர் ஹெட்மாஸ்டர் டா என்ற வசனத்தை முன் வைத்து கலாய்த்து வருகின்றனர். மேலும் சிலர், அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலம் இல்லை என்பதை இதன்மூலம் தான் தெரிகிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு அல்ல. இதனால்தான், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமெரிக்காவில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் 2024 டி20 உலகக் கோப்பையை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
- நான் பேட்டிங் செய்ய வரும் முன்னர் அவரது பந்து வீச்சு வீடியோவை 100 முறை பார்த்து விட்டுதான் பேட்டிங் செய்ய வருவேன்.
- அவர் ஒரு மிரட்டலான பந்து வீச்சாளராக இருந்தார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா துபாயில் உள்ள எப் எம் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.
அதில், நீங்கள் சந்தித்ததில் கடினமான பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரை கூறினார்.
இது குறித்து ரோகித் கூறியதாவது:-
நான் பேட்டிங் செய்ய வரும் முன்னர் அவர் பந்து வீச்சு வீடியோவை 100 முறை பார்த்து விட்டுதான் பேட்டிங் செய்ய வருவேன். அவர்தான் தென் ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்ன். அவர் கிரிக்கெட்டின் ஜாம்பவான்.
மேலும் அவர் தனது வாழ்க்கையில் என்ன சாதித்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. நான் அவரை பலமுறை எதிர்கொண்டேன். அவரது பந்து வீச்சு வேகமாக இருக்கும். அதில் ஸ்விங்கும் செய்வார். அப்படி பந்து வீசுவது மிகவும் கடினமானது.
அவர் ஒரு மிரட்டலான பந்து வீச்சாளராக இருந்தார். அவர் அனைத்து போட்டி, சீசனிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடுவார். அவருக்கு எதிராக விளையாடியதில் மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்வாறு ரோகித் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்