என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இதய நோய்கள்"

    • வெஜிடபிள் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்துவது இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • வெஜிடபிள் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கும்போது அதில் நச்சு கலவைகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் உருவாகிறது.

    வெஜிடபிள் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்துவது இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) எச்சரிக்கை விடுத்துள்ளது.

     

    ICMR மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இணைந்து, இந்தியர்களிடையே ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுப்பதற்கும் ஏற்ற உணவுப் பழக்கங்களை கடைபிடிக்க வலியுறுத்தி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சமயல் எண்ணெய்கள் அல்லது கொழுப்பு நிறைந்த எண்ணெய்களை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

     

    வெஜிடபிள் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கும்போது அதில் நச்சு கலவைகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் உருவாகிறது. இது இதய நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உணவகங்களிலும் வீடுகளிலும் வெஜிடபிள் எண்ணெய்யை சூடாக்கி பயன்படுத்துவது சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. இதை சுட்டிக்காட்டியே ICMR இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. வெஜிடபிள் எண்ணெய்யை 1 அல்லது 2 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதே பாதுக்காப்பானதாகும். அதற்கு மேல் அதை சேமித்து வைத்துப் பயன்படுத்துவது ஆபத்திலேயே முடியும் என்று மருத்துவ வல்லுனர்களும் தெரிவிக்கின்றனர்.

    • வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயங்கள் உள்ளன
    • உயர் இரத்த அழுத்தம் 7% அதிகரிக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

    இந்தியாவில் காய்ச்சல் தலைவலிக்கு பெரும்பாலனோர் பாராசிட்டமால் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் பாராசிட்டமால் மாத்திரைகள் பல்வேறு ஆய்வுகளில் உட்கொள்ள தகுதி அற்றவையாக வரையறுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்தும் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இரைப்பை குடல், இருதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

     

    இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 180,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உடல்நலன் குறித்த தரவுகள் ஆராயப்பட்டது.

    பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துபவர்களிடையே வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகியவற்றின் அபாயங்கள் அதிகரித்துள்ளன என்ற முடிவை இந்த ஆய்வு முன்வைக்கிறது.

    அதன்படி, வயதானவர்கள் நீண்ட காலமாக பாராசிட்டமால் பயன்படுத்தினால் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான ஆபத்து 19%, இதய செயலிழப்பு சம்பவங்களில் 9% அதிகரிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் 7% அதிகரிக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.  

    ×