search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைக் ஹஸ்சி"

    • விராட் கோலி, ரோகித் சர்மா நிறைய ரசிகர்களை சேர்க்கக்கூடிய தரம் கொண்டவர்கள்.
    • கடந்த காலங்களிலும் இவர்கள் விமர்சனங்களை தாண்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

    சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை குறைந்தது 4-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் தவிக்கிறது.

    இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பார்ம் பெரிய அளவில் இல்லை. அவர்களது பார்ம் குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இவர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி, ரோகித் சர்மா நிறைய ரசிகர்களை சேர்க்கக்கூடிய தரம் கொண்டவர்கள். கடந்த காலங்களிலும் இவர்கள் விமர்சனங்களை தாண்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி இருக்க இவர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

    • முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட டோனியை போன்று வேறு யாரும் இல்லை.
    • காயத்தில் இருந்து மீண்டு வந்து இருப்பதால் தான் இறுதியில் பேட்டிங் செய்ய வருகிறார்.

    பெங்களூரு:

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி அளித்த ஒரு பேட்டியில், 'டோனி தொடர்ந்து விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம்.

    அவர் தற்போதும் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். பயிற்சி முகாமுக்கு முன்னதாகவே வந்து நிறைய பந்துகளை எதிர்கொண்டு தயாராகிறார்.

    கடந்த ஐ.பி.எல். தொடருக்கு பிறகு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் அவரது பணிச் சுமையை சரியாக நிர்வகிக்க வேண்டும். அவர் நடப்பு தொடரில் தொடக்கத்தில் இருந்து உடல் தகுதியை சரியாக கவனித்து விளையாடி வருகிறார்.

    காயத்தில் இருந்து மீண்டு வந்து இருப்பதால் தான் அவர் இறுதி கட்டத்தில் பேட்டிங் செய்ய வருகிறார். முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட டோனியை போன்று வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறேன். அவர் தனித்திறமை மிக்க வீரர். அவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்று நம்புகிறேன்.

    ஆனால் நாம் அதனை காத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர் மட்டுமே முடிவு எடுக்க முடியும். இது குறித்து அவர் உடனடியாக முடிவு எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை' என்று தெரிவித்தார்.

    ×