search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.வி. சீனிவாஸ்"

    • இதுவரை 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது.
    • மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 4 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடைபெற இருக் கிறது.

    அரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை வாக்குப்பதிவு நடை பெறவில்லை. அரியானா வில் உள்ள 10 தொகுதிக்கு வருகிற 25-ந்தேதியும், பஞ்சாப்பின் 13 இடங்கள் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகள் ஆகியவற்றுக்கு ஜூன் 1-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது.

    இந்த 3 மாநிலங்களும் இளைஞர்களை அதிக அளவில் பாதுகாப்பு படைகளுக்கு அனுப்புவதில் முன்னணி வகிக்கின்றது. பஞ்சாப், அரியானா, இமாச்சலபிரதேச மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் ஓட்டுகளை கவர காங்கிரஸ் புதிய வியூகம் அமைத்துள்ளது.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்ப்பதற்காக 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    இதன்படி 17½ வயது முதல் 21 வயது வரை கொண்ட இளைஞர்கள் 4 ஆண்டு களுக்கு ஒப்பந் தத்தில் முப்படை அணிக்கு தேர்வு செய்யப் படுவார்கள். அவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் மேலும் 15 ஆண்டு களுக்கு பணியில் வைத்து கொள்ளப் படுவார்கள். மற்றவர்கள் 4 ஆண்டுடன் பணியில் இருந்து விடுவிக்கப் படுவார்கள்.

    இந்த திட்டம் விமர் சனத்துக்கு உள்ளானது. அக்னிபாத் திட்டம் முடி வுக்கு கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. பழைய ஆள் சேர்ப்பு முறை மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் உறுதி அளித்தது.

    அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரசார் இந்த 3 மாநிலங்களிலும் வீடு, வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்து வரு கிறார்கள். இளம் வாக்காளர்களை கவரும் வகையில் இந்த தேர்தல் வியூகம் அமைக்கப் பட்டுள்ளது. அக்னிபாத்தை நீக்குவது உள்பட கட்சியின் 25 உத்தரவாதங்களை விளக்கி தீவிர பிரசாரத்தை இளைஞர் காங்கிரஸ் மேற் கொண்டுள்ளது.

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. சீனிவாஸ் கூறும்போது, `இளைஞர் களுக்கு நீதி கிடைக்க வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்கிறோம்.

    நாம் எங்கு சென்றாலும் வேலையில்லா திண்டாட்டம் தான் மிகப் பெரிய பிரச்சினை. நாங்கள் 30 லட்சம் அரசு வேலைகளை வழங்குவதாக வாக்குறுதிஅளித்து காலக் கெடு வகுத்துள்ளோம். இந்த நேரத்தில் இளைஞர்கள் சிறந்த எதிர் காலத்துக்காக எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்றார்.

    ×