search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5-வது கட்ட தேர்தல்"

    • திங்கட்கிழமை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
    • ஓட்டுச்சாவடிகளில் 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப் பட்டு வரும் தேர்தலில் இதுவரை 4 கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.

    கடந்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவானது. 26-ந்தேதி நடந்த 2-வது கட்ட தேர்தலில் 88 தொகுதிகளில் 66.71 சதவீத வாக்குகள் பதிவானது.

    கடந்த 7-ந்தேதி 3-வது கட்டமாக தேர்தல் நடந்த 94 தொகுதிகளில் 65.68 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 13-ந்தேதி 4-வது கட்டமாக 96 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 69.16 சதவீத வாக்குகள் பதிவானது.

    மொத்தத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 கட்ட தேர்தல்களில் 67 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இதுவரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இந்தியாவில் மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல் 4 கட்ட தேர்தலில் சுமார் 45 கோடி பேர் வாக்களித்து இருக்கிறார்கள்.

    அடுத்து வருகிற திங்கட் கிழமை 5-வது கட்ட தேர்த லும், 25-ந்தேதி 6-வது கட்ட தேர்தலும் ஜூன் 1-ந்தேதி 7-வது கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. தற்போது 5-வது கட்ட தேர்தல் பிரசாரம் 49 தொகுதிகளில் மும்முரமாக நடந்து வருகிறது.

    பீகார், ஜார்க்கண்ட், மராட்டியம், ஒடிசா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், காஷ்மீர், லடாக் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டமாக உள்ளது.

    5-வது கட்ட தேர்தலில்தான் ராகுல் போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த 49 தொகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய உள்ளது. அதற்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடத்தப்படும். திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

    இதையொட்டி 49 தொகுதிகளிலும் ஓட்டுச் சாவடிகளில் 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ×