என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெள்ளை பூசணிக்காய்"
- ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் கார்டிசோல் உற்பத்தியைக கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
- உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் பூசணி ஜூஸ் சிறந்த காய்கறியாகும்.
வெள்ளை பூசணிக்காய் போன்ற முழுக்க முழுக்க நீர்ச்சத்து இருக்கிற காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. குறிப்பாக சில குழந்தைகள் இதை பக்கத்தில் கூட சேர்ப்பதில்லை. ஆனால் அதன் அற்புதமான நன்மைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ள பூசணி குளிர்ச்சியான நீர்ச்சத்து பண்புகளை கொண்டுள்ளது.
பூசணி ஜூஸில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
பெரும்பாலான நாகரிகம் என்ற பெயரில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையைக் கடைப்பிடிக்கின்றனர். பூசணி ஜூஸ் இவர்களுக்கு ஒரு மந்திர மருந்து போல் செயல்படுகிறது. இது உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்குகிறது மற்றும் சிறுநீர்ப்பையின் வழக்கமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
இருமல் மற்றும் சளி போன்ற மாறிவரும் காலநிலை நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தாகவும் பூசணி பயன்படுத்தப்படுகிறது.
மிசோரமில், லுஷே போன்ற பழங்குடியினர் கடுமையான வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய பூசணி ஜூஸ், சூப்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார்கள்.
பூசணிக்காயில் கலோரிகள் மிக மிகக் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், கூடுதல் எடையை விரைவாகக் குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது.
இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், நீண்ட நேரத்திற்கு பசியை தூண்டுவதில்லை. அதோடு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விரைவாக எடையைக் குறைக்க உதவி செய்கிறது.
நிறைய பேருக்கு குளிர்காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் உடலில் உண்டாகும் அதிகப்படியான சூட்டின் காரணமாக நிறைய உடலியல் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த உடல் சூட்டை அதிகரிப்பதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் கூட மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. அப்படி உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் பூசணி ஜூஸ் சிறந்த காய்கறியாகும். ஏனெனில் இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
இது நீர்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், உடலில் சேரும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் விளைவை கட்டுப்படுத்தி அஜீரணம் மற்றும் வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
பூசணிக்காய் ஜூஸில் கால்சியம், துத்தநாகம் (ஜிங்க்), பாஸ்பரஸ் போன்ற அனைத்து வகையாக முக்கிய ஊட்டச்சத்துக்களும், தியாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின்களும் நிறைந்துள்ள பூசணி ஜூஸ் ஆற்றல் மட்டங்களை பெரிதும் அதிகரிக்கிறது. இது உடல் சோர்வைப் போக்கி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்ய மிகச்சிறந்த தீர்வாக இந்த பூசணிக்காய் ஜூஸ் இருக்கிறது. வயிற்றுப் பகுதியில் உண்டாகும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, பிற நோய்களைத் தாக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் இந்த பூசணிக்காய் ஜூஸ் ஊக்குவித்து, குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்துக்கும் இந்த பூசணிக்காய். மன அழுத்தம், மனப் பதட்டம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.
இதிலுள்ள அதிகப்படியான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் கார்டிசோல் உற்பத்தியைக கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
அதோடு இன்சோம்னியா (insomnia) என்னும் தூக்கமின்மை மற்றும் மனப் பதட்டம் போன்ற பிரச்சினைகளைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது.
தேவையான பொருள்கள்:
வெள்ளை பூசணி - 1 கப்
இஞ்சி - ஒரு இன்ச் அளவு
பூண்டு - 2 பல்
உப்பு - சிறிதளவு
எலுமிச்சை பழம் - 1
தேன் - 1 ஸ்பூன்
புதினா இலைகள் - 5
செய்முறை:
முதலில் பூசணிக்காயை தோல் சீவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பூசணி உடன் பூண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து பிளண்டரில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த ஜூஸை ஒரு கிளாஸில் வடிகட்டி ஊற்றி கொள்ளவும்.
எலுமிச்சை ஜூஸ், உப்பு, தேன் மற்றும் புதினா இலைகள் உட்பட மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, நன்கு கலக்கவும். பூசணி ஜூஸ் தயார். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் நிறைய பலன்களைப் பெற முடியும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்